இளையராஜாவின் இசை விண்வெளியில் ஒலிக்கவிருக்கும் அற்புதமான செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது.
இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் அரை நூற்றாண்டு காலமாக உலகெங்கிலும் உள்ள ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. அவரது மெல்லிசைப் பாடல்களில் மயங்காதவர்களே இருக்க முடியாது. தற்போது ராஜாவின் பாடல்கள் விண்ணைத் தாண்டி விண்வெளியிலும் விரைவில் ஒலிக்கும் என்ற அட்டகாசமான செய்தி வெளியாகியிருக்கிறது.
வெளியாகியுள்ள தகவல்களின்படி, இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த குழு ஒன்று, இஸ்ரோ உதவியுடன் உலகின் மிகச்சிறிய செயற்கைக்கோள்களில் ஒன்றை உருவாக்கியுள்ளதாம். இது நாசாவின் உதவியுடன் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அந்த
சாட்டிலைட்டில் இளையராஜா பாடல் ஒன்று விண்வெளிக்கு அனுப்பப்பட்டு, அங்கு ஒலிபரப்பப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Dhanush: நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட தனுஷ்...
தனது
இசையை விண்வெளியில் இசைக்க இளையராஜா ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் இளையராஜா பக்தர்கள் அவர் இசை மீது எப்போதும் பெருமை கொள்வது போல், இப்போதும் பெருமை பட்டுக்கொள்ளலாம். இதன் அதிகாரப்பூர்வ
அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.