ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இசை என்பதே ஏமாற்று வேலை தான் - இளையராஜா ஏன் அப்படி சொன்னார்?

இசை என்பதே ஏமாற்று வேலை தான் - இளையராஜா ஏன் அப்படி சொன்னார்?

இசைஞானி இளையராஜா

இசைஞானி இளையராஜா

உதாரணத்துக்கு சொல்லும் பாடலைப் போல் இளையராஜா ஒருபோதும் போட மாட்டார். ஆனால், இந்த சூழலை அவர் எப்படி எதிர்கொள்வார்?

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

இசைஞானி இளையராஜாவின் ராக் வித் ராஜா இசை நிகழ்ச்சி சென்ற வாரம் சென்னையில் நடந்தது. இசையுடன் பல்வேறு தகவல்களையும் பகிர்ந்தார் இசைஞானி. முரட்டுக்காளை படத்தின் பாடலை எப்படி ஏவிஎம்-மின் பழையப்பட பாடலில் இருந்து உருவாக்கினார் என்பதை சொன்னார். ஹேராம் படத்திற்காக பின்னணி இசை சேர்க்கக் கொடுத்த காட்சிகளை எப்படி பாடல் காட்சியாக மாற்றினார் என்பதை அவர் சொன்னது இசை ரசிகர்களை பரவசம் கொள்ள வைத்தது.

பல வருடங்கள் முன்பு இதுபோன்ற லைவ் கான்சர்டில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இளையராஜாவிடம் ஒரு கேள்வி கேட்டார். இளையராஜாவிடம் வரும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் குறிப்பிட்ட சிச்சுவேஷனைச் சொல்லி, இதற்கு இந்த மாதிரி பாடல் இருந்தால் நன்றாக இருக்கும் என ஏதாவது பாடலை ரெபரன்சுக்காகச் சொல்லியது உண்டா. அப்படியான சூழ்நிலையில் இளையராஜா என்ன செய்வார் என்பது கேள்வி. அவர்கள் உதாரணத்துக்கு சொல்லும் பாடலைப் போல் இளையராஜா ஒருபோதும் போட மாட்டார். ஆனால், இந்த சூழலை அவர் எப்படி எதிர்கொள்வார்?

இதற்கு வழக்கம்போல் உதாரணம் சொல்லி இசை ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் இளையராஜா. அவர் சொன்ன உதாரணம், அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ள கமல் பாடுகிற, 'புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா' பாடல். பாடலுக்கான சிச்சுவேஷனை கமல் சொல்ல, இளையராஜா அதற்கு மெட்டமைத்திருக்கிறார். மெட்டு நன்றாக இருக்கிறது, ஆனால் நான் வேற மாதிரி எதிர்பார்க்கிறேன் என்று, எம்ஜிஆர் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை கமல் உதாரணத்துக்கு சொல்லியிருக்கிறார். அதன்படி இளையராஜா ஒரு மெட்டமைத்து, பாடல் எழுதப்பட்டு, ஒலிப்பதிவும் முடிந்திருக்கிறது. அதுதான் 'புதுமாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா' பாடல். அந்தப் பாடலை கமல் சொன்ன எம்ஜிஆர் பாடலில் இருந்து எப்படி உருவாக்கினார் என்பதை ஒலிப்பதிவுக்குப் பிறகே கமலிடம் கூறியிருக்கிறார் இளையராஜா.

isaignani Ilaiyaraaja, ilaiyaraaja music, ilaiyaraaja songs, isaignani ilayaraja, இசைஞானி இளையராஜா, இளையராஜா பாடல்கள், isaignani ilayaraja video, isaignani ilayaraja songs, last respect through isaignani ilayaraja, isaignani ilayaraja fans, இசைஞானி இளையராஜா பாடல்கள், இசைஞானி இளையராஜா ரசிகர்கள், isaignani Ilaiyaraaja music, isaignani Ilaiyaraaja concert, isaignani Ilaiyaraaja rock with raaja, isaignani Ilaiyaraaja kamal haasan, இசைஞானி இளையராஜா, ராக் வித் ராஜா, இளையராஜா கமல் ஹாசன்

இசை நிகழ்ச்சியில் இந்தத் தகவலை சொன்னவர், புதுமாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா பாடலை எந்தப் பாடலில் இருந்து எடுத்தேன் என்று யாருமே கண்டுபிடிக்க முடியாது என்றவர், "இசையமைப்பது மெஜிஷியன் வேலை போலத்தான். ஒரு மாங்காய் இருக்கும். அதை மெஜிஷியன் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட்டு திறப்பார். மாங்காய்க்கு பதில் அதிலிருந்து ஒரு புறா வரும். ஒரு புறாவை கடவுளைத் தவிர யாராலும் உண்டு பண்ண முடியாதுன்னு நமக்குத் தெரியும். ஆனாலும், ஒரு கணம் நாம ஏமாந்து போவோம். அந்த மாதிரியான ஏமாற்று வேலைதான் இசையும். அதிகமா ஏமாத்துறவங்க அதிகமா நாட்ல பாப்புலராகிறாங்க. அதுக்கு நானும் விதிவிலக்கல்ல. இன்ஸ்பிரேஷன்ல இருந்துதான் ட்யூன் போட முடியும். நம்மளால ஒண்ணும் பண்ண முடியாதுங்கிறதை பல பாடல்கள்ல என் வார்த்தைகளிலேயே நான் தெளிவுப்படுத்தியிருக்கேன்."

isaignani Ilaiyaraaja, ilaiyaraaja music, ilaiyaraaja songs, isaignani ilayaraja, இசைஞானி இளையராஜா, இளையராஜா பாடல்கள், isaignani ilayaraja video, isaignani ilayaraja songs, last respect through isaignani ilayaraja, isaignani ilayaraja fans, இசைஞானி இளையராஜா பாடல்கள், இசைஞானி இளையராஜா ரசிகர்கள், isaignani Ilaiyaraaja music, isaignani Ilaiyaraaja concert, isaignani Ilaiyaraaja rock with raaja, isaignani Ilaiyaraaja kamal haasan, இசைஞானி இளையராஜா, ராக் வித் ராஜா, இளையராஜா கமல் ஹாசன்

சாபம் விட்ட எல்லாருக்கும் நன்றி... விஜய் டிவி பாவம் கணேசன் நவீன் மனைவி கண்ணீர்

இதை சொல்லிவிட்டு கமல் உதாரணத்துக்காக சொன்ன பாடலை பாடி, அதிலிருந்து எப்படி புதுமாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா பாடலை உருவாக்கினார் என்பதை விளக்கினார் இளையராஜா. கமல் உதாரணத்துக்கு சொன்ன பாடல்,

'நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியை தான்

நல்ல அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்...'

இந்த டீயூனை ஒட்டியே,

'புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா

அந்த மணமகள் தான் வந்த நேரமடா..'

பாடலை இளையராஜா அமைத்திருப்பார். ஆனால் அது வேறு, இது வேறு. இளையராஜாவாக சொல்லாதவரை யாராலும் அதை கண்டுபிடிக்கவும் முடிந்ததில்லை.

இதையும் படிங்க - ட்விட்டரில் தனுஷ் பெயர் நீக்கம்... அப்பா பெயரை இணைத்துக் கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

isaignani Ilaiyaraaja, ilaiyaraaja music, ilaiyaraaja songs, isaignani ilayaraja, இசைஞானி இளையராஜா, இளையராஜா பாடல்கள், isaignani ilayaraja video, isaignani ilayaraja songs, last respect through isaignani ilayaraja, isaignani ilayaraja fans, இசைஞானி இளையராஜா பாடல்கள், இசைஞானி இளையராஜா ரசிகர்கள், isaignani Ilaiyaraaja music, isaignani Ilaiyaraaja concert, isaignani Ilaiyaraaja rock with raaja, isaignani Ilaiyaraaja kamal haasan, இசைஞானி இளையராஜா, ராக் வித் ராஜா, இளையராஜா கமல் ஹாசன்

இசையில் இளையராஜா ஒரு சாகரம். வருடத்துக்கு ஆறு படம் செய்தபோது போட்டதல்ல அவரது ஹிட் பாடல்கள். அபூர்வ சகோதரர்கள் வெளியானது 1989. அந்த வருடம் இளையராஜா இசையமைத்தது 43 படங்கள். அபூர்வ சகோதரர்கள், சின்னப்பதாஸ், ராஜாதி ராஜா, சிவா, மாப்பிள்ளை, வெற்றிவிழா, வருஷம் 16, புதுப்புது அர்த்தங்கள் ஆகியவை அந்த ஆண்டு வெளியான படங்களில் சில. இந்தப் படங்களின் அனைத்துப் பாடல்களுமே மெகா ஹிட். 43 படங்களில் படத்துக்கு 5 பாடல்கள் என்று வைத்துக் கொண்டால் 215 பாடல்கள் வருகின்றன. அதில் 90 சதவீத பாடல்கள் நாம் இப்போதும் கேட்டு மகிழ்கிற வெற்றிப் பாடல்கள். இந்த இசை சாதனையின் அருகில் கூட இதுவரை எந்த இசையமைப்பாளரும் வரவில்லை. இன்றுவரை இளையராஜாவுக்கு நிகர் இளையராஜா மட்டுமே.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Shalini C
First published:

Tags: Ilaiyaraja, Ilayaraja, Kamal Haasan