Home /News /entertainment /

விஜய் சேதுபதி படத்திற்கு எதிராக இசைஞானி இளையராஜா புகார்

விஜய் சேதுபதி படத்திற்கு எதிராக இசைஞானி இளையராஜா புகார்

விஜய் சேதுபதி - இளையராஜா

விஜய் சேதுபதி - இளையராஜா

தனக்குத் தெரியாமல், அனுமதியில்லாமல் இந்த மாற்றம் செய்யப்பட்டதாக இசையமைப்பாளர் சங்கத்தில் 'கடைசி விவசாயி' மீது இளையராஜா புகார் அளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’ படத்தின் மீது இசைஞானி இளையராஜா புகார் அளித்துள்ளார்.

    விஜய் சேதுபதி தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள 'கடைசி விவசாயி' விரைவில் திரைக்கு வர உள்ளது. படத்தின் கதையில் ஈர்க்கப்பட்ட விஜய் சேதுபதி, அதன் தயாரிப்பிலும் இணைந்தார்.

    இசைஞானி இளையராஜா 'கடைசி விவசாயி' படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னணி இசையை முடித்த நிலையில், அதில் மணிகண்டன் திருப்தியடையவில்லையாம். அதனால், இசைஞானியிடம் சில மாறுதல்களைக் கேட்க, அவர் அதற்கு மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

    இதனால் பின்னணி இசையை சந்தோஷ் நாராயணை அமைக்கச் செய்த மணிகண்டன், ட்ரைலரையும் வெளியிட்டார். இதையடுத்து தனக்குத் தெரியாமல், அனுமதியில்லாமல் இந்த மாற்றம் செய்யப்பட்டதாக இசையமைப்பாளர் சங்கத்தில் 'கடைசி விவசாயி' மீது இளையராஜா புகார் அளித்துள்ளார். இதனால் இந்த ஆண்டு டிசம்பரில் திரைக்கு வர திட்டமிடப்பட்ட இப்படத்திற்கு இசைஞானியின் இந்த புகார் மேலும் சிக்கலை வரவைத்துள்ளது.

    மேலும் படிக்க - இனி தல என்று என்னை அழைக்க வேண்டாம் - நடிகர் அஜித்குமார் வேண்டுகோள்

    'கடைசி விவசாயி' படத்தில் 70 வயதான அறிமுக நடிகர் நல்லாண்டி முன்னணி நடிகராக நடிக்கிறார். யோகி பாபு ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க, விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    அடுத்த செய்தி