Home /News /entertainment /

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இசைஞானி இளையராஜா சந்திப்பு… வைரலாகும் புகைப்படங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இசைஞானி இளையராஜா சந்திப்பு… வைரலாகும் புகைப்படங்கள்

ரஜினிகாந்த் - இளையராஜா

ரஜினிகாந்த் - இளையராஜா

ஜூன் 2-ம்தேதி இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி கோவையில் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இசைஞானி இளையராஜா இன்று காலை சந்தித்து பேசினார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

ரஜினிகாந்த் கதாநாயகனாக அறிமுகமான பைரவி படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். மற்ற இசையமைப்பாளர்களை விட இளையராஜாவுடன் தான் அதிக முறை இணைந்து படத்தை அளித்திருக்கிறார் ரஜினி.

1980 முதல் 1989 வரை ரஜினிகாந்த் நடிப்பில் தமிழில் மட்டும் (கௌரவ தோற்றம் நீங்கலாக) 50 படங்களில் நடித்துள்ளார். அதில் இளையராஜா அவர்கள் இசை அமைத்த திரைப்படங்களின் எண்ணிக்கை 33.

இதையும் படிங்க - தனுஷின் தி க்ரே மேன் படத்திற்கு ஸ்பெஷல் எமோஜி அளித்த ட்விட்டர்

1970,80 களில் வெளிவந்த ரஜினியின் பெரும்பாலான கமர்ஷியல் படங்களுக்கு இளையராஜாதான் இசையமைத்திருப்பார். அவரது இசையில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு மாஸ் பாடல்களும், ரஜினியின் ரசிகர்களை மிகவும் கவர்ந்தன. இந்த கூட்டணியில் மெலடி, காதல், சோகம் என பலதரப்பட்ட பாடல்கள் இன்றளவும் ரசிக்கப்படுகிறது.



கடைசியாக 1994-ல் வெளிவந்த வீரா படத்திற்கு பின்னர் ரஜினிகாந்த் – இளையராஜா கூட்டணி சேரவில்லை. இதன்பின்னர் ரஜினிகாந்த், தேவா, ஏ.ஆர். ரகுமான், வித்யாசாகர், அனிருத், இமான் உள்ளிட்டோருடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

இதையும் படிங்க - பிரித்விராஜின் ‘ஜன கன மன’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நெல்சன் திலீப் குமார் இயக்கவுள்ள ரஜினியின் 169வது படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் வைத்து இளையராஜா இன்று காலை நீண்ட நேரம் சந்தித்து பேசியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருவரின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.



ஜூன் 2-ம்தேதி இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி கோவையில் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதற்கான ஒத்திகையை ரஜினி இல்லத்தில் வைத்து இளையராஜா மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
Published by:Musthak
First published:

Tags: Ilayaraja, Rajinikanth

அடுத்த செய்தி