முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இசைஞானி இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய பிரதமர் மோடி… குவியும் வாழ்த்து

இசைஞானி இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய பிரதமர் மோடி… குவியும் வாழ்த்து

பிரதமர் மோடியிடம் டாக்டர் பட்டத்தை பெற்றுக் கொள்ளும் இளையராஜா.

பிரதமர் மோடியிடம் டாக்டர் பட்டத்தை பெற்றுக் கொள்ளும் இளையராஜா.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோ வெள்ளை தொப்பி அணிந்திருந்தது கவனத்தை ஈர்த்தது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இசைஞானி இளையராஜாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார். இதையொட்டி இளையராஜாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள காந்தி கிராமிய நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி, பல்கலைக்கழகத்தில் 2018, 19 ஆண்டுகள் மற்றும் 2019 -20ம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்க பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவின்போது இசைஞானி இளையராஜாவுக்கு பிரதமர் மோடி கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார்.

யுவன் ஷங்கர் ராஜாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா

நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோ வெள்ளை தொப்பி அணிந்திருந்தது கவனத்தை ஈர்த்தது.

கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற இளையராஜாவுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விளையாட்டு, கலை, இலக்கியம் உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்த விளங்கும் ஆளுமைகளை குடியரசு தலைவர் நேரடியாக மாநிலங்களவை உறுப்பினராக நியமித்து வருகிறார்.

அந்த வகையில் கலைத்துறையில் பல சாதனைகள் படைத்துள்ள இளையராஜா கடந்த ஜூலை 7-ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தால் நேரடியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Ilaiyaraja, MK Stalin, Modi