நடிகர் ரஜினிகாந்துடன் தான் இருக்கும், பழைய படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் இசைஞானி இளையராஜா.
தமிழ் சினிமாவின் இசை வரலாற்றை இளையராஜா எனும் பெயர் இல்லாமல் எழுதி விட முடியாது. ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலமாய் தமிழ் ரசிகர்களின் உணர்வுகளோடு கடந்துவிட்டது இவரது நாதம். காதல், நட்பு, பகை துரோகம், ஏக்கம் என எல்லா உணர்வுகளையும் இவரது இசை தலைமுறைகளைத் தாண்டி கடத்திக் கொண்டே இருக்கிறது.
தற்போது வெற்றிமாறனின் விடுதலை, விஷாலின் துப்பறிவாளன் 2 உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றி வருகிறார். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனது இசையால் பல கோடி ரசிகர்களின் கண்ணீரை துடைத்துக் கொண்டிருக்கும் இளையராஜா, எந்த நடிகர், எந்த இயக்குநர் என்றெல்லாம் பாராபட்சம் பார்க்காமல், சிறந்த பாடல்களை வழங்கி வருகிறார்.
அஜித்தின் நாங்க வேற மாரி சாதனையை முறியடித்த விஜய்யின் அரபிக் குத்து!
அப்படி இளையராஜாவுடன் பல நடிகர்கள் இணைந்துள்ளனர். அதில் முக்கியமானது இளையராஜா - ரஜினிகாந்த் கூட்டணி. இவர்கள் இருவரும் தந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. இந்நிலையில் ரஜினிகாந்துடன் தான் இருக்கும் பழைய படம் ஒன்றை பகிர்ந்து, ’என்றும் என்றென்றும்’ எனக் குறிப்பிட்டுள்ளார் இசைஞானி இளையராஜா.
Arabic Kuthu: யூ-ட்யூப் ட்ரெண்டிங்கில் முதலிடம், 20 மில்லியன் நிகழ்நேர பார்வைகள்... கலக்கும் விஜய்யின் அரபிக் குத்து!
இந்தப் படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. தவிர, இயக்குநர் ஆர்.பால்கி, ரஜினி, இசையமைப்பாளர் இளையராஜா மூவரும் விரைவில் புதிய படத்தில் ஒன்றிணைவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், அனிருத் இசையில், ரஜினியின் தலைவர் 169 பட அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியது. அதனால் இளையராஜாவும், ரஜினிகாந்தும் எப்போது இணைவார்கள் என்ற கேள்விக்கு பதிலில்லை.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.