Home /News /entertainment /

ஏ.ஆர்.ரஹ்மானின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட இளையராஜா - உற்சாகத்தில் இசை ரசிகர்கள்!

ஏ.ஆர்.ரஹ்மானின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட இளையராஜா - உற்சாகத்தில் இசை ரசிகர்கள்!

ஏ.ஆர்.ரஹ்மான் - இளையராஜா

ஏ.ஆர்.ரஹ்மான் - இளையராஜா

இசைஞானி இளையராஜாவும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து பணியாற்றுவார்களா? என்று எதிர்பார்ப்பு தற்போது நிறைவேறியிருக்கிறது.

    இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இசைஞானி இளையராஜா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    துபாயில் ‘துபாய் எக்ஸ்போ’ நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது. இதில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இசைக் நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. அங்கு சமீபத்தில் அனிருத், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கடந்த மார்ச் 5-ம் தேதி இசைஞானி இளையராஜாவின் இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. அதில் இளையராஜா பல்வேறு பாடல்களைப்பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

    இதைத் தொடர்ந்து துபாயில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் ஃபிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு இளையராஜா திடீர் விசிட் அடித்தார். இந்த அற்புதமான தருணத்தை தனது சமூக வலைதள பக்கங்களில் படத்துடன் பதிவு செய்திருந்தார் ரஹ்மான். அந்த பதிவில், “மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களை ஃபிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. எதிர்காலத்தில் எங்கள் ஸ்டூடியோவில் அவர் இசையமைப்பார் என நம்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

    தனுஷுடன் ஏற்பட்ட பிரிவு... செல்வராகவன் படத்தைப் பகிர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்ன விஷயம்!



    இதையடுத்து அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் தற்போது ஏ.ஆர்.ரஹ்மானின் ட்வீட்டுக்கு பதிலளித்திருக்கும் இளையராஜா, “கோரிக்கை ஏற்கப்பட்டது. விரைவில் இசையமைப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

    பிளாட் ஃபார்முக்கு வந்த விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரகேசர் - காரணம் என்ன?



    இது இசை ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: AR Rahman, Ilayaraja

    அடுத்த செய்தி