AR Rahman: அட்லீ படத்திற்கு மூன்றாவது முறை இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்?

ஏ.ஆர்.ரஹ்மான்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஏற்கனவே அட்லீயுடன் மெர்சல், பிகில் போன்ற படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Share this:
    இயக்குநர் அட்லீ - நடிகர் ஷாருக்கான் இணையும் படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்குநர் அட்லீ தனது புதிய படத்தை இயக்கவுள்ளதாகவும், டிசம்பர் மாதத்திற்குள் அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கக்கூடும் என்றும் முன்பே நாம் தெரிவித்திருந்தோம். ஷாரூக் கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் தனது 'பதான்' படத்தில் நடித்து வருகிறார், இன்னும் சில மாதங்களில் அந்த படபிடிப்பு முடிவடையும்.

    இந்நிலையில் அட்லீ - ஷாருக்கான் இணையும் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஏற்கனவே அட்லீயுடன் மெர்சல், பிகில் போன்ற படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தவிர இயக்குநர் அட்லீ தற்போது தனது படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் மும்முரமாக உள்ளார். அவரது படத்தில் ஷாருக் கான் இரட்டை வேடங்களில் நடிக்க வாய்ப்புள்ளது என்ற பேச்சும் உள்ளது. படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: