நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் ஜெயிலர் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் அவரது 170வது படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது. அதற்கேற்ப அவரது 170வது படத்தை டான் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கவிருக்கிறார் என்றும் லவ் டுடே இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கவிருப்பதாகவும் தகவல் பரவியது.
இந்த நிலையில் ஜெய் பீம் இயக்குநர் டிஜே ஞானவேல் இயக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியாகி ஆச்சரியமடையச் செய்துள்ளது. கமர்ஷியல் இயக்குநர்கள் பலர் இருக்கையில் ஜெய் பீம் இயக்குநரை ரஜினிகாந்த் எப்படி தேர்ந்தெடுத்தார் என்பதுதான் ஆச்சரியத்துக்கு காரணம்.
இயக்குநர் டிஜே ஞானவேலின் ஜெய்பீம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகி ஜெய் பீம் படம் தேசிய அளவில் பாராட்டுக்களை குவித்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் சூர்யாவை ஒரு தேர்ந்த நடிகராக ரசிகர்கள் மனதில் நிறுத்தியது ஜெய் பீம் படம். இதனையடுத்து தலைவர் 170 படம் கமர்ஷியல் படமாக இருக்குமா அல்லது ஜெய் பீம் படம் போன்று முக்கிய பிரச்னைகளை பேசும் படமாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் தலைவர் 170 படத்தில் ரஜினிகாந்த் கேரக்டர் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அதன்படி இந்தப் படத்தில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான ரஜினிகாந்த், தூக்குதண்டனைக்கு எதிராக போராடுபவராக வருகிறாராம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anirudh, Rajinikanth