• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சூர்ப்பனகை அகழ்வாராய்ச்சியை மையப்படுத்திய கதையா?

சூர்ப்பனகை அகழ்வாராய்ச்சியை மையப்படுத்திய கதையா?

சூர்ப்பனகை

சூர்ப்பனகை

அகழ்வாய்வு செய்கையில் எலும்புக்கூடு ஒன்று கிடைக்கிறது என்பதைத் தாண்டி இந்தப் படத்தின் கதைக்கும், அகழ்வாய்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதே உண்மை.

  • Share this:
    ரெஜினா நடித்திருக்கும் நாயகி மையத் திரைப்படமான சூர்ப்பனகை படத்தின் புகைப்படத்தை வைத்து அது அகழ்வாய்வை மையப்படுத்திய திரைப்படம் என ஒரு செய்தி ஊடகங்களில் வெளியானது. கீழடி ஆகழ்வாய்வு நடந்துவரும் நிலையில், அதுபோன்ற ஒரு திரைப்படமும் வெளியாகிறது எனவும் செய்தியில் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், அது உண்மையா?

    கார்த்திக் ராஜு என்பவர் சூர்ப்பனகை படத்தை எழுதி, இயக்கியுள்ளார். இதுவொரு நாயகி மையத் திரைப்படம். கதைப்படி ரெஜினா அகழ்வாராய்ச்சி செய்கிறவர். காட்டில் அகழ்வாய்வு மேற்கொள்கையில் ஒரு எலும்புக்கூடு அவர்களுக்கு கிடைக்கிறது. அது யாருடையது என பரிசோதிக்கையில், திடுக்கிடும் உண்மை ஒன்று தெரிய வருகிறது. அதேநேரம், சிலர் மர்மமாக கொல்லப்படுகிறார்கள்.

    இந்த கொலைகளுக்கும் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூட்டிற்கும் தொடர்பு உள்ளது. அதேபோல் ரெஜினாவுக்கும் தொடர்பு உள்ளது. கடந்தகாலத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவத்தின் தொடர்ச்சியாக இந்த கொலைகள் நடக்கின்றன. அது என்ன என்பதுதான் சூர்ப்பனகை படத்தின் கதை. அந்த எலும்புக்கூட்டிற்கும் ரெஜினாவுக்கும் உள்ள தொடர்புதான் படத்தின் மையச் சரடே.

    Is the soorpanagai story excavation, soorpanagai, soorpanagai movie, soorpanagai movie download, soorpanagai release date, soorpanagai movie wiki, soorpanagai images, soorpanagai movie download isaimini, சூர்ப்பனகை, சூர்ப்பனகை திரைப்படம், சூர்ப்பனகை ரெஜினா, சூர்ப்பனகை ரிலீஸ்
    சூர்ப்பனகை


    அகழ்வாய்வு செய்கையில் எலும்புக்கூடு ஒன்று கிடைக்கிறது என்பதைத் தாண்டி இந்தப் படத்தின் கதைக்கும், அகழ்வாய்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதே உண்மை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஹாரர் த்ரில்லர் படமான இதற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் படம் வெளியாகிறது. திரையரங்கில் வெளியாகுமா இல்லை நேரடி ஓடிடி வெளியீடா என்பது சில தினங்களில் தெரிந்துவிடும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: