• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மாநாடு கொரிய படத்தின் காப்பியா? - தயாரிப்பாளர் விளக்கம்!

மாநாடு கொரிய படத்தின் காப்பியா? - தயாரிப்பாளர் விளக்கம்!

மாநாடு பட போஸ்டர்

மாநாடு பட போஸ்டர்

பிரபல நாளிதழின் இணையபக்கத்திலும் இதே செய்தி வெளியானது. இதனை ட்விட்டரில் எடுத்துப் போட்டு நகைக்கிற எமோஜியை போட்டு கலாய்த்திருந்தார் வெங்கட்பிரபு.

  • News18
  • Last Updated :
  • Share this:
மாநாடு திரைப்படம் கொரிய படத்தின் காப்பி, அந்நிறுவனம் மாநாடு தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்ற தகவல் கடந்த இரண்டு நாள்களாக இணையத்தில் பரப்பப்பட்டு வருகிறது. இதற்கு மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விளக்கமளித்துள்ளார்.

மாநாடு படத்தை டைம் லூப் திரைக்கதை யுக்தியில் வெங்கட்பிரபு எடுத்துள்ளார். இதனை படத்தின் ட்ரெய்லரிலும் தெ ளிவாக குறிப்பிட்டுள்ளார். டைம் லூப் என்பது ஒரு நாளின் நிகழ்வுகள் மறுபடி மறுபடி நிகழ்ந்து கொண்டேயிருக்கும். அதாவது குறிப்பிட்ட நபர் அந்த நாளில் மாட்டிக் கொண்டிருப்பார்.

இந்தத் திரைக்கதை யுக்தியில் பல படங்கள் வந்துள்ளன. முக்கியமாக ஹாலிவுட்டில் டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியான எட்ஜ் ஆஃப் டூமாரோ. அதைவிட சரியான உதாரணம் கொரிய படமான டே. இது குறித்து நாம் விவரமாக நமது தளத்தில் ஏற்கனவே எழுதியுள்ளோம்

இந்த டே படத்தில் ஒரு மருத்துவரும் வேறு இரு நபர்களும் ஒரே நாளில் மாட்டிக் கொண்டிருப்பார்கள். இந்தக் கதையை அப்படியே பிரதி செய்வது போல் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சி.வி.குமார் ஜாங்கோ என்ற படத்தை தயாரித்துள்ளார். உண்மையில் டைம் லூப் திரைக்கதை யுக்தியில் எடுக்கப்பட்டிருக்கும் ஜாங்கோ படமே டே படத்தின் கதையை கொண்டிருக்கிறது.

மாநாடு அரசியல் பின்புலத்தில் எடுக்கப்பட்டிருக்கும் வேறு கதை. ஆனால், மாநாடு படத்தைப் பற்றி சர்ச்சை கிளப்பினால்தான் அதற்கொரு கவனம் கிடைக்கும் என ஜாங்கோ படத்தைவிட்டு, மாநாடு படத்தை இணையத்தில் இழுத்துப் போட்டு துவைக்கிறார்கள்.

பிரபல நாளிதழின் இணையபக்கத்திலும் இதே செய்தி வெளியானது. இதனை ட்விட்டரில் எடுத்துப் போட்டு நகைக்கிற எமோஜியை போட்டு கலாய்த்திருந்தார் வெங்கட்பிரபு.

Also read... பிக்பாஸில் கலந்து கொண்டதால் ஏகப்பட்ட நஷ்டம் - நாடியா குடும்பத்தினர் மனவருத்தம்!

மாநாடு படத்தின் தயாரிப்பாளர் கூறுகையில், டைம் லூப் உலக அளவிலான பொதுவான திரைக்கதை. கோவை பின்னணியில் அரசியல் களத்தில் மாநாடு படத்தை எடுத்திருக்கிறோம். ட்ரெய்லரை வைத்து ஒன்றை முடிவு செய்யக் கூடாது.

இது கொரிய படத்தின் காப்பி இல்லை. எந்த நிறுவனமும் எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை. மாநாடு படத்தை ஆங்கிலத்தில் டப் செய்து உலகம் முழுவதும் வெளியிட உள்ளோம். காப்பி படமாக இருந்தால் இதை செய்ய முடியுமா என்று கேட்டுள்ளார்

டே கொரிய படத்தின் கதையின் சாயலில் எடுக்கப்பட்டிருப்பது ஜாங்கோ படமேயன்றி மாநாடு அல்ல. டே, மாநாடு இரண்டும் டைம் லூப் திரைக்கதை யுக்தியில் எடுக்கப்பட்டிருப்பதால் ஒரே கதை என்ற தோற்றம் ஏற்பட்டுள்ளதே தவிர, இந்த தகவலில் உண்மையில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: