Home /News /entertainment /

இதயக்கனி குறித்து முக்தா சீனிவாசன் சொன்ன தகவல் பிழையானதா?

இதயக்கனி குறித்து முக்தா சீனிவாசன் சொன்ன தகவல் பிழையானதா?

இதயக்கனி

இதயக்கனி

சிவாஜி நடித்த அவன் தான் மனிதன் 1975-ல் 100 நாள்கள் ஓடிய படங்களுள் ஒன்று. அது சிவாஜியின் 175 வது படமும் கூட.

கமலா, ரஜினியா என்று அடித்துக் கொண்ட ரசிகர்கள் விஜய்யா, அஜித்தா என்ற பரிமாண வளர்ச்சியடைந்து, தனுஷா, சிம்புவா என்ற லெவலுக்கு வந்துவிட்டனர். மூன்று தலைமுறைகள் கடந்தும், சம்பந்தப்பட்ட இரு நடிகர்கள் மறைந்து பல வருடங்கள் ஆகியும் சிவாஜியா, எம்ஜிஆரா என்ற சண்டை இன்றும் இணையத்தில் நடந்து கொண்டிருக்கிறது. மகாபாரத போரைவிடவும் நீண்டதும் சுவாரஸியமும் கொண்ட இந்த யுத்தத்தின் ஒரு துளியைத்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

1975-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி எம்ஜிஆர், ராதா சலூஜா, பண்டரிபாய், ஆர்.எஸ்.மனோகர் நடித்த இதயக்கனி திரைப்படம் வெளியானது. ஏ.ஜெகன்நாதன் படத்தை இயக்கியிருந்தார். சத்யா மூவிஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் படத்தை தயாரித்திருந்தார். மெல்லிசை மன்னரின் 'இன்பமே உந்தன் பேர் பெண்மையோ...,' 'நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற...', போன்ற அருமையான பாடல்கள் இடம்பெற்ற திரைப்படம்.

எம்.ஜி.ஆர். 1972-ல் திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவை உருவாக்கிய பின் நடித்த நேற்று இன்று நாளை, இதயக்கனி, இன்று போல் என்றும் வாழ்க படங்கள் அவரது அதிமுக கொள்கை விளக்க படங்கள் போலவே பார்க்கப்பட்டன. எம்ஜிஆரை தலைவராக முன்னிறுத்தும் வகையில், நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற என்பதான பாடல்கள் வைக்கப்பட்டன.

இதயக்கனி படம் பல இடங்களில் 100 நாள்களை கடந்து ஓடியது. அதன் வெற்றி விழாவில் பேசிய தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன், 1975-ல் வெளிவந்த தமிழ் படங்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் இதயக்கனி. இது தமிழ் படவுலகுக்கு பெருமை. ஆகவே, படத்தை பாராட்டுவதில் வெட்கமோ, கூச்சமோ தேவையில்லை.

இசை என்பதே ஏமாற்று வேலை தான் - இளையராஜா ஏன் அப்படி சொன்னார்?

Is the information given by Muktha Srinivasan about Idhayakkani wrong, idhayakkani tamil full movie download, idhayakkani mp3 songs download, idhayakkani songs download masstamilan, idhayakkani tamil full movie online, idhayakkani full movie tamilrockers, idhayakkani mp3 songs download isaimini, idhayakkani meaning, idhayakkani magazine, avanthan manithan full movie download in tamilrockers, avanthan manithan full movie download in isaimini, avanthan manithan songs download, avanthan manithan tamil full movie, அவன்தான் மனிதன் திரைப்படம், இதயக்கனி, இதயக்கனி திரைப்படம், அவன் தான் மனிதன், சிவாஜி எம்ஜிஆர்

1975-ல் தமிழ்ப் படங்கள் 59 வெளிவந்துள்ளன. 8 அல்லது 9 படங்கள் 100 நாட்கள் ஓடி வழக்கமுள்ள தமிழ்நாட்டில், சென்ற வருடம் (1975) 4 படங்கள்தான் 100 நாட்கள் ஓடின. இந்தப் படங்களில் சென்னை மட்டுமில்லாது வெளியூர்களிலும் 100 நாட்கள் ஓடிய ஒரே படம் இதயக்கனி மட்டுமே என்று புகழ்ந்து பேசினார். இதனை எம்ஜிஆர் ரசிகர்கள் இப்போதும் பகிர்ந்து, எம்ஜிஆர்தான் எப்போதுமே டாப் என்று கூறி வருகின்றனர்.

நடிகர் பிரசாந்த் விரைவில் இரண்டாவது திருமணம்?

Is the information given by Muktha Srinivasan about Idhayakkani wrong, idhayakkani tamil full movie download, idhayakkani mp3 songs download, idhayakkani songs download masstamilan, idhayakkani tamil full movie online, idhayakkani full movie tamilrockers, idhayakkani mp3 songs download isaimini, idhayakkani meaning, idhayakkani magazine, avanthan manithan full movie download in tamilrockers, avanthan manithan full movie download in isaimini, avanthan manithan songs download, avanthan manithan tamil full movie, அவன்தான் மனிதன் திரைப்படம், இதயக்கனி, இதயக்கனி திரைப்படம், அவன் தான் மனிதன், சிவாஜி எம்ஜிஆர்

முக்தா சீனிவாசனின் இந்தப் பேச்சு உண்மையில்லை, பொய்யான தகவலை அவர் அளித்திருக்கிறார் என்று இதயக்கனி குறித்து பேச்சு வரும்போதெல்லாம் சிவாஜி ரசிகர்கள் பதிலடி கொடுப்பது வழக்கம். காரணம், சிவாஜி நடித்த அவன் தான் மனிதன் 1975-ல் 100 நாள்கள் ஓடிய படங்களுள் ஒன்று. அது சிவாஜியின் 175 வது படமும் கூட.

பாத்ரூம் இல்லாம அவதிப்பட்டேன் - குக் வித் கோமாளி புகழிடம் தன் கஷ்டத்தைப் பகிர்ந்துக் கொண்ட கிரிக்கெட் வீரர் நடராஜன்!

ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கத்தில் சிவாஜி, முத்துராமன், ஜெயலலிதா, மஞ்சுளா போன்றோர் நடித்திருந்தனர். மெல்லிசை மன்னர் - கண்ணதாசன் - டி.எம்.சௌந்தர்ராஜன் என்ற முக்கூட்டணி தத்துவப் பாடலில் அட்டகாசம் செய்திருந்தது. 'மனிதன் நினைப்பதுண்டு...,' 'ஆட்டுவித்தால் யாரொருவர்...,' 'அன்பு நடமாடும் கலைக்கூடமே...' ஆகிய பாடல்கள் அப்போது அனைவராலும் முணுமுணுக்கப்பட்டன.

Is the information given by Muktha Srinivasan about Idhayakkani wrong, idhayakkani tamil full movie download, idhayakkani mp3 songs download, idhayakkani songs download masstamilan, idhayakkani tamil full movie online, idhayakkani full movie tamilrockers, idhayakkani mp3 songs download isaimini, idhayakkani meaning, idhayakkani magazine, avanthan manithan full movie download in tamilrockers, avanthan manithan full movie download in isaimini, avanthan manithan songs download, avanthan manithan tamil full movie, அவன்தான் மனிதன் திரைப்படம், இதயக்கனி, இதயக்கனி திரைப்படம், அவன் தான் மனிதன், சிவாஜி எம்ஜிஆர்

அவன்தான் மனிதன் திரைப்படம் சென்னையில் சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி ஆகிய திரையரங்குகளிலும், சென்னைக்கு வெளியே திருச்சி ராஜா, கோவை கீதாலயா, மதுரை சென்ட்ரல் ஆகிய திரையரங்குகளிலும் 100 நாட்கள் ஓடியது. அந்தக் காலத்தில் பத்திரிகைகளில் வெளிவந்த அவன்தான் மனிதன் 100 வது நாள் விளம்பரங்களில் இந்தத் திரையரங்குகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. உண்மை இப்படியிருக்க, 1975-ல் வெளியான தமிழ் படங்களில் இதயக்கனி மட்டுமே சென்னைக்கு வெளியே 100 நாட்கள் ஓடிய ஒரே படம் என்ற முக்தா சீனிவாசனின் பேச்சு உண்மைக்கு புறம்பானது என்கிறார்கள் சிவாஜி ரசிகர்கள்.

இது குறித்து மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள் யாரேனும் இதுபற்றிப் பேசினால் ஒரு தெளிவு கிடைக்கும்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actor Sivaji ganesan, MGR

அடுத்த செய்தி