Dhanush: பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் தனுஷ் படம்? ஆச்சர்யத்தில் திரையுலகம்!

தனுஷ்

தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கப் போகும் படம் பான் - இந்தியன் திரைப்படமாக தயாராகிறது.

  • Share this:
    தனுஷ், சேகர் கம்முலா இணையும் படத்தின் பட்ஜெட் 120 கோடி என்ற தகவல் ஆச்சரிய அலைகளை எழுப்பியுள்ளது.

    தனுஷ் இந்தியில் நடித்தப் படங்களைவிட அவர் தமிழில் நடித்த அசுரன், கர்ணன் படங்கள் அவருக்கு அதிக இந்தி ரசிகர்களை சம்பாதித்து தந்துள்ளது. ஓடிடி தளத்தில் படங்கள் ஆங்கில சப் டைட்டிலுடன் வெளியாவதால் நிகழ்ந்த ஆச்சரியமான மாற்றம் இது. அவர் தமிழில் நடித்தாலும் அந்தப் படத்தை தெலுங்கு, இந்தி, மலையாள ரசிகர்களும் ஆவலுடன் தேடிப் பார்க்கின்றனர்.

    தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கப் போகும் படம் பான் - இந்தியன் திரைப்படமாக தயாராகிறது. அதாவது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளுடன் இந்தியிலும் இப்படம் வெளியாகும். மிகப்பிரமாண்டமாக தயாராகும் இந்தப் படம் 120 கோடி பட்ஜெட்டில் தயாராவதாக செய்திகள் கூறுகின்றன. தனுஷ் நடிப்பில் இந்தியாவில் தயாரான படங்களில் ஜகமே தந்திரமே அதிக பட்ஜெட்டில் தயாரான படம். அதனைத் தாண்டி 120 கோடியில் சேகர் கம்முலாவின் படம் தயாராகிறது. தனுஷுக்கு மட்டுமே 50 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பாகுபலி படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் அனைத்துப் படங்களும் பான் - இந்தியன் படங்களாக தயாராகின்றன. காரணம் அவற்றின் பிரமாண்ட பட்ஜெட். தனுஷும் அதுபோன்ற வியாபார உலகில் சேகர் கம்முலா மூலம் அடியெடுத்து வைக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து செல்வராகவன், மாரி செல்வராஜ், ராட்சசன் ராம்குமார், கார்த்திக் நரேன் உள்பட பலரது இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: