முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தெலுங்கு பட காப்பியா லியோ ப்ரோமா... இணையத்தில் விவாதத்தை கிளப்பிய நாகர்ஜூனாவின் கோஸ்ட் வீடியோ!

தெலுங்கு பட காப்பியா லியோ ப்ரோமா... இணையத்தில் விவாதத்தை கிளப்பிய நாகர்ஜூனாவின் கோஸ்ட் வீடியோ!

நாகார்ஜுனா - விஜய்

நாகார்ஜுனா - விஜய்

விக்ரம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை லியோ படத்தின் ப்ரோமோ ஏற்படுத்தவில்லை என்றே விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் லியோ, படத்தின் டைட்டில் அறிவிப்பு ப்ரோமோ இன்று வெளியானது. இந்த ப்ரொமோ நாகார்ஜுனா நடிப்பில் சமீபத்தில் வெளியான கோஸ்ட் படத்தின் டைட்டில் அறிவிப்பு புரோமோ போன்று இருப்பதாக சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் இணைந்துள்ளனர். இந்த படம் குறித்த தகவல்கள் ஏற்கனவே வெளியான நிலையில், லியோ படம் தளபதி 67 என பரவலாக அறியப்பட்டு வந்தது. இந்நிலையில் படத்தின் டைட்டில் லியோ என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கத்தி, மாஸ்டர், பீஸ்ட் படங்களை தொடர்ந்து 4-வது முறையாக விஜய் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக யு.யு. லலித்குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் அதாவது LCU- வில் இந்த படம் இடம் பெறுமா? என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்தது. ஆனால் இந்த படம் தனிக் கதையாக உருவாகும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

' isDesktop="true" id="884848" youtubeid="qN3wfuPYTI4" category="cinema">

' isDesktop="true" id="884848" youtubeid="K4z8tG03Vbs" category="cinema">

இந்நிலையில் இன்று வெளியான லியோ படத்தின் டைட்டில் ப்ரொமோ வீடியோ நாகர்ஜுனா நடித்த நடிப்பில் வெளிவந்த கோஸ்ட் படத்தின் டைட்டில் வீடியோவை போன்று இருப்பதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கூறியுள்ளனர். லியோ மற்றும் படத்தின் ப்ரமோ அறிவிப்பு வீடியோக்களை பார்க்கும்போது இரு வீடியோக்களுக்கும் இடையே, ஓரளவு ஒற்றுமை இருப்பதை காணமுடிகிறது. கமலின் விக்ரம் படத்தின் டைட்டில் அறிவிப்பின் போது வெளியான ப்ரோமோ மிகப்பெரும் எதிர்பார்ப்பை, படத்தின் மீது ஏற்படுத்தியது. அதனுடன் லியோ படத்தின் ப்ரோமோவை ஒப்பிடும்போது விக்ரம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை லியோ படத்தின் ப்ரோமோ ஏற்படுத்தவில்லை என்றே விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

First published:

Tags: Actor Vijay