Home /News /entertainment /

கமல் தயாரிப்பில் நடிக்கும் சிவகார்த்திகேயன்...?

கமல் தயாரிப்பில் நடிக்கும் சிவகார்த்திகேயன்...?

சிவகார்த்திகேயன் - கமல்

சிவகார்த்திகேயன் - கமல்

ராஜ்குமார் பெரியசாமியும், சிவகார்த்திகேயனும் விஜய் தொலைக்காட்சியில் பணிபுரியும்போதே அறிமுகமானவர்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
கமலின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்ஸ் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கயிருப்பதாக கோடம்பாக்கத்தில் ஒரு தகவல் உலவுகிறது.

கமல் தான் நடிக்கும் படங்கள் மட்டுமின்றி பிற நடிகர்கள் நடிக்கும் படங்களையும் தயாரிப்பதுண்டு. சத்யராஜை நாயகனாக நிலைநிறுத்திய படங்களுள் ஒன்றான கடமை கண்ணியம் கட்டுப்பாடு படத்தை கமல் தான் தயாரித்தார். நாசரின் மகளிர் மட்டும், மாதவன் நடித்த நள தமயந்தி, சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளி வந்த கடாரம் கொண்டான் என உதாரணங்கள் பல உண்டு. இந்த வரிசையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தையும் அவர் தயாரிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

சிவகார்த்திகேயன் டான் படத்தை முடித்துள்ளார். அயலான் படம் தயாரிப்பில் உள்ளது. தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் அவர் நடிக்கும் படம் 2022 ஜனவரி 18-ஆம் தேதிக்கு மேல் தொடங்கப்படும் என்கின்றன செய்திகள். அவர் நடிப்பதாக ஒப்புக் கொண்ட சிங்கபாதை திரைப்படம் குறித்து எந்தத் தகவலும் இல்லை.

இந்நிலையில், ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அவர் ஒரு படம் நடிப்பதாகவும், கமலின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் அதனை தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்குமார் பெரியசாமியும், சிவகார்த்திகேயனும் விஜய் தொலைக்காட்சியில் பணிபுரியும்போதே அறிமுகமானவர்கள். ராஜ்குமார் இப்போது கமலின் பிக் பாஸ் உருவாக்கத்தில் பங்காற்றி வருகிறார். இந்த தகவல் உண்மையா இல்லை, வதந்தியா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Kamal Haasan, Sivakarthikeyan

அடுத்த செய்தி