• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சீனுராமசாமியின் இடிமுழக்கம் மலையாளப் படத்தின் ரீமேக்கா?

சீனுராமசாமியின் இடிமுழக்கம் மலையாளப் படத்தின் ரீமேக்கா?

சீனு ராமசாமி

சீனு ராமசாமி

சீனுராமசாமி கிராமம் சார்ந்த மனித உணர்வுகளின் பின்னணியில் படம் செய்வர். இடிமுழக்கத்தில் முதல்முறையாக ஆக்ஷன் கதைக்கு திரும்பியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சீனுராமசாமி இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ் நடித்துவந்த இடிமுழக்கம் படத்தின் மொத்த படப்பிடிப்பும் சமீபத்தில் முடிவடைந்தது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்துவரும் நிலையில், இந்தப் படம் மலையாளத்தில் வெளியான லக்ஷியம் படத்தின் ரீமேக் என்ற தகவல் உலவுகிறது.

சீனுராமசாமி கிராமம் சார்ந்த மனித உணர்வுகளின் பின்னணியில் படம் செய்வர். இடிமுழக்கத்தில் முதல்முறையாக ஆக்ஷன் கதைக்கு திரும்பியுள்ளார். எனினும், படத்தின் கதை நடப்பது கிராமத்தில். இந்த கதை மலையாள லக்ஷியம் படத்தின் தழுவல் என ஒருசாரார் கூறி வருகின்றனர்

லக்ஷியம் படம் 2017 இல் வெளியானது. அக்ஸர் கான் என்பவர் இயக்கியிருந்தார். படத்தின் திரைக்கதையை எழுதியவர் பிரபல இயக்குனர் ஜீத்து ஜோசப். படத்தின் இணை தயாரிப்பும் இவரே. பிஜு மேனனும், இந்திரஜித்தும் பிரதான வேடங்களில் நடித்திருந்தனர்

Also read... பிரகாஷ்ராஜால் தடைபட்ட கார்த்தியின் விருமன்...?

பிஜு மேனனும், இந்திரஜித்தும் போலீசால் கைது செய்து அழைத்துச் செல்லப்படும் போது, அவர்கள் செல்லும் வாகனம் விபத்துக்குள்ளாக, இருவரும் கையில் விலங்குடன் தப்பிக்கிறார்கள். பிஜு மேனன் மால் ஒன்றில் கைக்கடிகாரம் திருடியதற்காக கைது செய்யப்பட்டிருப்பார். இந்திரஜித் தனது காதலியை கொலை செய்தார் என கைது செய்திருப்பார்கள். உண்மையில் அவர் கொலை செய்யவில்லை. யார் கொலை செய்தது என்பதை கண்டுபிடிக்க, 3 லட்சங்கள் தருவதாக இந்திரஜித் பிஜு மேனனிடம் பேரம் பேசுவார். கொலையாளி யார் என்பதுதான் கதையின் மையம்

இந்தக் கதையைதான் இடிமுழக்கம் என்ற பெயரில் சீனுராமசாமி எடுத்துள்ளார் என சிலர் கூறி வருகின்றனர். லக்ஷியம் இரு ஹீரோ சப்ஜெக்ட். ஆனால், இடிமுழக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ் மட்டும்தான் ஹீரோ. அதனால் இது வேறு கதை என்கிறார்கள் இன்னொருசாரார். சீனுராமசாமி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: