• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • குருப் படத்தின் வெற்றியால் தமிழில் வெளியாகிறதா சல்யூட்?

குருப் படத்தின் வெற்றியால் தமிழில் வெளியாகிறதா சல்யூட்?

காட்சி படம்

காட்சி படம்

Dulquer Salmaan : சல்யூட் படத்தையும் தமிழில் வெளியிடுகிறதா படக்குழு..

  • Share this:
துல்கர் சல்மானின் குருப் படம் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுள்ளது. இதனால், அவரது சல்யூட் படத்தையும் தமிழில் வெளியிடும் முயற்சிகள் நடக்கிறது.

நவம்பர் 12 ஆம் தேதி குருப் திரைப்படம் வெளியானது. முதல்முறையாக துல்கர் சல்மானின் படமொன்றை அது மலையாளத்தில் வெளியாகும் அதேநாளில் தமிழிலும் வெளியிட்டனர். பொதுவாக மலையாளத்தில் ஒரு படம் வெளியாகி ஓடி முடிந்த பிறகே அதன் தமிழ் டப்பிங் வெளியாகும். ஆனால், முதல்முறையாக குருப் மலையாளத்தில் வெளியான அன்று தமிழிலும் வெளியானது. படத்துக்கு நல்ல வரவேற்பு.
தமிழகத்தில் முதல்வார இறுதியில் தமிழ், மலையாளம் சேர்த்து 3.62 கோடிகளை படம் வசூலித்ததாக செய்திகள் கூறுகின்றன.

இது மொத்த கிராஸ் வசூல். சென்னையில் மட்டும் முதல் வார இறுதியில் 65 லட்சங்களை குருப் வசூலித்திருக்கிறது. இதுவரை துல்கர் சல்மானின் எந்தப் படமும் இப்படியொரு வசூலை பெற்றதில்லை. மலையாளப் படங்களுக்கே தமிழகத்தில் இந்த வரவேற்பு புதியதுதான். ஓடிடியில் சப் டைட்டிலுடன் மலையாளப் படங்களை இந்த கொரோனா காலத்தில் அதிகம் பேர் பார்த்ததன் பாதிப்பு இது என்றும் கூறலாம்.

also read :  ஓடிடியில் நேரடியாக வெளியாகும் தனுஷின் 4வது திரைப்படம்?

குருப் படத்தின் வெற்றியால் அடுத்த மாதம் வெளியாகவிருக்கும் துல்கரின் சல்யூட் படத்தையும் தமிழில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். தமிழில் 36 வயதினிலே படத்தை இயக்கிய ரோஷன் ஆன்ட்ரூ சல்யூட்டை இயக்கியுள்ளார். அந்தப் படத்துக்கு திரைக்கதை எழுதிய பாபி - சஞ்சய் சல்யூட்டுக்கும் திரைக்கதை எழுதியுள்ளார்கள்.

இவர்கள் இதுவரை ரோஷன் ஆன்ட்ரூவின் பத்து திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
குருப் படத்தில் துல்கர் கிரிமினலாக நடித்திருந்தார். சல்யூட்டில் அப்படியே உல்டா. போலீஸ்காரர். இந்தப் படத்துக்கு முதலில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பதாக இருந்தது. என்ன நடந்ததோ இறுதியில் ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்தார். எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத். படம் தமிழில் வெளியானால் குருப்புக்கு கிடைத்த அதே வரவேற்பு சல்யூட்டுக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: