ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கர்ப்பம் அடைந்தாரா நயன்தாரா? விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஃபோட்டோவால் ரசிகர்கள் உற்சாகம்

கர்ப்பம் அடைந்தாரா நயன்தாரா? விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஃபோட்டோவால் ரசிகர்கள் உற்சாகம்

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

சமீபத்தில் இருவரும் துபாயில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைராகின. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஃபோட்டோ ஒன்று நயன்தாரா ரசிகர்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது. அவர் கர்ப்பம் அடைந்திருப்பதாக ரசிகர்கள் யூகத்தை வெளியிட்டு வருகின்றனர்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றது. இதற்கு பின்னர் இருவரும் தாய்லாந்து, கிரீஸ் உள்ளிட்ட நாடுகளில் தங்களது தேனிலவை கொண்டாடினர்.

சமீபத்தில் இருவரும் துபாயில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைராகின. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த படம் துபாயில் எடுக்கப்பட்டுள்ளது. இதனை வெளியிட்ட விக்னேஷ் சிவன், குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுகிறோம். இது வருங்காலத்தில் எங்களுக்கு உதவும் என்று கூறியுள்ளார்.

கார்த்தி - ராஜு முருகன் கூட்டணியில் உருவாகும் ஜப்பான்!

இதன் அடிப்படையில் இருவரும் விரைவில் பெற்றோராவது உறுதி என்று, நயன்தாரா கர்ப்பம் அடைந்திருப்பதைத் தான் விக்னேஷ் சிவன் இப்படி மறைமுகமாக கூறுகிறார் என்றும் ரசிகர்கள் யூகங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித் நடிக்கும் 62-வது படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் இடம்பெறும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் விரைவில் வெளியாகவுள்ளது.

மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் நடிகர் சூரி.. இயக்குனர் யார் தெரியுமா?

நயன்தாரா தற்போது ஷாரூக்கானுடன் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகவுள்ளது.

Published by:Musthak
First published:

Tags: Nayanthara