ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Karnan: கருணாநிதி மீது வீண்பழி போடுகிறதா மாரி செல்வராஜின் கர்ணன்?

Karnan: கருணாநிதி மீது வீண்பழி போடுகிறதா மாரி செல்வராஜின் கர்ணன்?

கருணாநிதி - கர்ணன் திரைப்படம்

கருணாநிதி - கர்ணன் திரைப்படம்

கர்ணன் படம் அனைத்துத் தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்று வெற்றிநடை போடுகிறது. அரசியல் பின்புலத்தில் எடுக்கப்பட்ட படம் என்பதால் அரசியல் ரீதியாக சில கருத்து மோதல்களையும் இந்தப் படம் உருவாக்கியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கர்ணன் படம் அனைத்துத் தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்று வெற்றிநடை போடுகிறது. அரசியல் பின்புலத்தில் எடுக்கப்பட்ட படம் என்பதால் அரசியல் ரீதியாக சில கருத்து மோதல்களையும் இந்தப் படம் உருவாக்கியுள்ளது.

கர்ணன் படம் கொடியன்குளத்தில் நடந்த சாதிய மோதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கொடியன்குளம் பெயரை நினைவுப்படுத்தும் விதமாக கர்ணன் படத்தில் வரும் கிராமத்துக்கு பொடியன்குளம் என பெயர் வைத்துள்ளார் மாரி செல்வராஜ். கொடியன்குளம் கலவரம் நடந்ததும், உயிர்கள் பறிக்கப்பட்டதும் 1995-ஆம் ஆண்டில். அப்போது ஜெயலலிதா முதல்வராக இருந்தார். ஆனால், 1998-ல் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது கொடியன்குளம் கலவரம் நடந்ததாக கர்ணனில் காண்பிக்கப்படுகிறது எனவும், இது வரலாற்றை திரித்து கூறும் செயல் எனவும் சில விமர்சகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதனை சமூகவலைத்தளங்களில் எழுதவும், யூடியூபில் வீடியோவாக வெளியிடவும் செய்தனர்.

கொடியன்குளம் சம்பவம் ஜெயலலிதா ஆட்சியில் நடந்தது உண்மைதான். ஆனால், 1997-ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது போக்குவரத்து கழகங்களுக்கு வரலாற்று நாயகர்களின் பெயர்களை சூட்டியபோது, மாவீரன் சுந்தரலிங்கனார் பெயர் வைத்த பேருந்துகளில் ஏற மாட்டோம் என ஆதிக்க சாதியினர் கலவரம் செய்தனர். சுந்தரலிங்கனார் பெயரை மாற்றியே ஆக வேண்டிய சூழல் ஏற்பட்ட போது, அவரது பெயரை மாற்றி அவருக்கு இழுக்கு சேர்க்க மாட்டேன் என்று ஒட்டு மொத்தமாக அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் சூடிய பெயர்களை மாற்றினார் கருணாநிதி.

கர்ணன் படம் பேருந்து அரசியலை ஒரு குறியீடாகக் கொண்டு முன்னகர்கிறது. பேருந்து பிரச்சனை ஏற்பட்டது கருணாநிதி ஆட்சியில். அந்தப் பிரச்சனையில் ஒடுக்கப்பட்டவர்கள் பக்கம் நின்றது கருணாநிதியின் அரசு. எனினும், அந்த பேருந்து பிரச்சனையை நினைவுப்படுத்தும் விதமாக கர்ணன் கதை 1998-ல் நடப்பதாக மாரி செல்வராஜ் காட்டியுள்ளார் என கர்ணன் தரப்பை நியாயப்படுத்துகிறவர்கள் விளக்கமளிக்கின்றனர். இதற்கு மாரி செல்வராஜ் விரைவில் விளக்கமளிப்பார் என எதிர்பார்ப்போம்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: DMK leader Karunanidhi, Karnan, Mari selvaraj