கௌதமின் கிட்டார் கம்பி மேலே நின்று காப்பி அடிக்கப்பட்ட கதையா?

கிட்டார் கம்பி மேலே நின்று

இரண்டு கதைக்கும் பல்வேறு ஒற்றுமைகள் இருப்பதை சுட்டிக்காட்டி பா.ராகவனின் நாவலை கௌதம் காப்பி செய்ததாக பா.ராகவனின் வாசகர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கௌதம் வாசுதேவ மேனன் நவரசா ஆந்தாலஜிக்காக சூர்யாவை வைத்து எடுத்த படம், கிட்டார் கம்பி மேலே நின்று. இந்த (குறும்)படத்தின் கதை பிரபல எழுத்தாளர் பா.ராகவன் எழுதிய நாவலை தழுவியது என பா.ராகவனின் வாசகர்கள் பலரும் எழுதி வருகின்றனர். 

பா.ராகவன் எழுதிய இறவான் நாவலின் நாயகன் எட்வின் இசைக்கலைஞன். பெர்லின் சென்று தனது இசைத் திறமையை நிரூபிக்க ஆசைப்படுகிறான். அவன் தனது சின்ன வயதில் கேட்ட குரலுக்கு சொந்தக்காரியை தேடுகிறான். அவளை வைத்து தனது பாடலை பாட வைக்க வேண்டும் என்பது அவன் விருப்பம். இந்த தேடுதலின் போது அவனறியாமல் அவள்மீது காதல் கொள்கிறான். எதிர்பாராத நிலையில் அந்தப் பெண்ணே அவனைத் தேடி வருவாள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாவலின் இந்த மையமான சரடு கிட்டார் கம்பி மேலே நின்று படத்திலும் வருகிறது. நாயகன் லண்டன் சென்று தனது இசைத் திறமையை நிரூபிக்க நினைக்கிறான். தன்னிடம் பாட வரும் பெண்ணின் மீது காதல் கொள்கிறான்.

Also read... ஹரி இயக்கத்தில் அருண் விஜய் - ஷுட்டிங் ஸ்பாட் படங்கள்!

நாவலில் இருவரும் ஒன்று சேர மாட்டார்கள். தனது லட்சியமே பெரிது என்று நாயகன் வெளிநாடு கிளம்பிச் செல்வான். அவன் சிம்பொனியை கன்டெக்ட் செய்வதாக நாவல் முடியும். படத்தில் காதலுக்காக லட்சியத்தை விடுவதாக வந்தாலும் இறுதியில் நாயகன் லண்டனில் கச்சேரி செய்வார்.

இரண்டு கதைக்கும் பல்வேறு ஒற்றுமைகள் இருப்பதை சுட்டிக்காட்டி பா.ராகவனின் நாவலை கௌதம் காப்பி செய்ததாக பா.ராகவனின் வாசகர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். கௌதமின் பதில் என்னவோ.
Published by:Vinothini Aandisamy
First published: