• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடுவதால் தயாரிப்பாளர்களுக்கு லாபமா, நஷ்டமா?

ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடுவதால் தயாரிப்பாளர்களுக்கு லாபமா, நஷ்டமா?

மாதிரி படம்

மாதிரி படம்

ஓடிடி-யில் படங்களை வெளியிடுவதால் தயாரிப்பாளர்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும், ஓடிடி தளங்கள் எப்படி லாபம் பார்க்கும் என்பது குறித்து பலருக்கும் கேள்வி உள்ளது.

  • Share this:
    சூர்யாவே தயாரித்து நடித்திருக்கும் சூரரைப் போற்று படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் 60 கோடி என்கிறது கோலிவுட் தரப்பு. இதில் நடிகர்களின் சம்பளம் 35 கோடி எனவும் தயாரிப்பு செலவு 25 கோடி எனவும் கூறப்படுகிறது.

    அண்மைக் காலத்தில் சூர்யா நடித்த படங்களிலேயே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்பதால் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமம் 20 கோடி, இந்தி டப்பிங் உரிமம் 12 கோடி, ஆடியோ உரிமம் 3 கோடி என படம் முடிவதற்கு முன்பாகவே 35 கோடி வரை வியாபாரம் ஆனது. இதுபோக அமேசான் பிரைம் உரிமம் 60 கோடிக்கு விற்கப்பட்டிருப்பதால் இப்படம் ஒட்டுமொத்தமாக 95 கோடி வரை வியாபாரமாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் தயாரிப்பு தரப்பிற்கு 35 கோடி வரை லாபம் கிடைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

    அதேசமயம் அமேசான் பிரைம் நிறுவனத்தைப் பொறுத்தவரை எவ்வளவு பேர் இப்படத்தைப் பார்க்கிறார்கள் என்பதை விட புதிதாக எத்தனை சந்தாதாரர்கள் இணைகிறார்கள் என்பதைப் பொறுத்தே இப்படத்தால் அவர்களுக்கு லாபமா இல்லையா என்பதைச் சொல்ல முடியும். அந்த வகையில் சூரரைப் போற்று படத்தால் 6 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்கள் இணைந்தால் மட்டுமே அது அமேசான் பிரைம் நிறுவனத்திற்கு லாபமாக அமையும்.

    இது ஒருபக்கமிருக்க, தற்போதைய சூழலில் ஓடிடி-யில் படத்தை வெளியிடுவதே பாதுகாப்பான வழியாக இருக்கும் என்கின்றனர் தயாரிப்பு தரப்பைச் சேர்ந்தவர்கள். உதாரணத்திற்கு ஜோதிகா நடிப்பில் உருவான பொன்மகள் வந்தாள் திரைப்படம் கிட்டத்தட்ட 6 கோடி ரூபாய் பொருட்செலவில் எடுக்கப்பட்டு அமேசான் பிரைம் நிறுவனத்திடம் 9 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதன் மூலம் தயாரிப்பாளர் சூர்யாவுக்கு வெளியீட்டுக்கு முன்பே 3 கோடி ரூபாய் லாபம் கிடைத்தது.

    Also read: ₹2.55 கோடிக்கு ஏலம் போனது மகாத்மா காந்தியின் மூக்கு கண்ணாடி! இங்கிலாந்து ஏல வரலாற்றில் சாதனை

    அண்மைக் காலங்களில் ஜோதிகா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான எந்தப் படங்களுமே மூன்று கோடி வரை லாபம் கொடுக்காததால் சூர்யாவைப் பொறுத்தவரை அமேசான் நிறுவனத்திற்கு அப்படத்தை விற்றது மிகச்சரியான முடிவாகப் பார்க்கப்பட்டது. படத்தை வாங்கிய அமேசான் பிரைம் நிறுவனத்திற்கோ பெரிய லாபம் இல்லை. அதேசமயம் பெரிய நஷ்டமும் இல்லை என்ற ரீதியில் சந்தாதாரர்கள் சேர்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

    ஆனால் இதெல்லாம் சூர்யா, ஜோதிகா போன்ற பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டும்தான். சிறு பட்ஜெட் படங்களின் நிலையோ மீண்டும் கவலைக்கிடம்தான். சமீபத்தில் ஓடிடி-யில் வெளியான டேனி, காக்டெயில், லாக்கப் போன்ற சிறு பட்ஜெட் படங்களுக்கு போட்ட தொகை மட்டுமே திரும்ப கிடைத்ததாகவும் சில சமயம் அதுவும் கிடைக்காமல் போனதாகவும் சொல்லப்படுகிறது.


    மொத்தத்தில் ஓடிடி-யில் படத்தை வெளியிடுவதன் மூலம் பெரிய நடிகர்களின் படங்கள் ஓரளவு லாபம் பார்க்கவும் சிறு பட்ஜெட் படங்கள் போட்ட முதலீட்டை திரும்பப் பெறும் சூழலும் தமிழ் சினிமாவில் தற்போது உருவாகியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: