ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

துணிவு ஷூட்டிங் : அது அஜித் சாரா? சென்னையில் குவிந்த கூட்டம்... ஆனா நடந்த கதை வேறு!

துணிவு ஷூட்டிங் : அது அஜித் சாரா? சென்னையில் குவிந்த கூட்டம்... ஆனா நடந்த கதை வேறு!

துணிவு

துணிவு

Thunivu | அஜித்தின் துணிவு திரைப்படத்தின் பேட்ச் ஒர்க் படப்பிடிப்பு எல்ஐசி கட்டடம் அருகே நடைபெற்றது. இயக்குநர் எச்.வினோத்தை அடையாளம் கண்ட ரசிகர்கள் அந்த இடத்தில் குவிந்தனர். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

துணிவு படத்தின் பேட்ச் ஒர்க் படப்பிடிப்பு எல்.ஐ.சி அருகே நடைபெற்றது. அஜித் குமார் - எச். வினோத் கூட்டணியில் உருவாக்கும் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் தாய்லாந்தில் முடிவடைந்தது. இந்த நிலையில் பேட்ச் ஒர்க் படப்பிடிப்பு இன்று அண்ணாசாலை எல்.ஐ.சி கட்டடம் அருகே நடைபெற்றது. இந்த திரைப்படம் ஒரு உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி இருந்தது. அதுவும் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது எனவும் கூறப்பட்டது.  இதற்காக அண்ணாசாலை செட்டை ஹைதராபாத்தில் அமைத்து படமாக்கி வந்தனர்.

அதில் எடுக்க தவறிய சில ஷாட்களை மட்டும் இன்று எல்.ஐ.சி கட்டடம் அருகே ரியல் லொகேஷனில் படமாக்கியுள்ளனர்.  அதில் அஜித் - மஞ்சு வாரியர் பங்கு பெறுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த காட்சிகளில் அவர்களைப் போல உருவம் கொண்டவர்களை வைத்து டூப் போட்டு எடுத்தனர் என படக்குழு தரப்பில் கூறப்பட்டது.

நடிகர் அஜித் தாய்லாந்தில் தன்னுடைய உலக பைக் பயணத்தை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பேட்ச் ஓர்க் படப்பிடிப்பில் எச்.வினோத்தை அடையாளம் கண்ட ரசிகர்கள் துணிவு படப்பிடிப்பு என்பதை தெரிந்துகொண்டு வேடிக்கை பார்த்தனர்.

நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி புதிய படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். ஜிப்ரன் இசையமைக்கிறார். இப்படத்திற்காக அஜித் முற்றிலும் மாறுபட்ட இரண்டு கெட் அப்களில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 'ஏகே 61' படத்தில் அஜித் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

Read More: அழகில் அசத்துறியே ஜாஸ்மின்னு... ரம்யா பாண்டியன் அசத்தல் போட்டோ ஷூட் ஸ்டில்ஸ்

இதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. 55 நாட்களுக்கு மேல் நடந்த முதல் கட்ட படப்பிடிப்பில் பெரும்பாலான காட்சிகளை படமாக்கி முடித்தனர். அதன் பின்பு படத்தொகுப்பு வேலைகள் நடைபெற்றன. அந்த சமயத்தில் நடிகர் அஜித்குமார் தன்னுடைய குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றார்.

அதன் பின் சென்னை திரும்பி அவர், மீண்டும் துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்புக்காக கடந்த 23ஆம் தேதி நடிகர் அஜித்குமார் தாய்லாந்து புறப்பட்டார்.  அங்கு கடந்த 18 நாட்களாக தொடர் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

பொங்கல் பண்டிகைக்கு இந்த திரைப்படத்தை வெளியிட தயாரிப்பாளர் போனி கபூர் திட்டமிட்டுள்ளார். அதனால் படத்தின் இறுதி கட்டப் பணிகளை விரைவில் முடிக்கவும் படக் குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.

First published:

Tags: Actor Ajith, Ajith fans