எனது விவாகரத்துக்கு தனுஷ் தான் காரணமா? - ஏ.எல்.விஜய் தந்தைக்கு அமலாபால் பதில்

எனது விவாகரத்துக்கு தனுஷ் தான் காரணமா? - ஏ.எல்.விஜய் தந்தைக்கு அமலாபால் பதில்
அமலாபால் | தனுஷ்
  • News18 Tamil
  • Last Updated: February 17, 2020, 10:00 PM IST
  • Share this:
இயக்குநர் விஜய்-க்கும் நடிகை அமலா பாலுக்கும் 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக 3 ஆண்டுகளுக்கு பிறகு 2017 பிப்ரவரி மாதம் இருவரும் விவாகரத்து பெற்றனர். இதையடுத்து ஐஸ்வர்யா என்ற பெண்ணை ஜூலை 11-ம் தேதி திருமணம் செய்து கொண்டார் இயக்குநர் விஜய்.

விவாகரத்துக்கான காரணம் குறித்து பேட்டியளித்த இயக்குநர் விஜய்யின் தந்தை அழகப்பன் ஏ.எல்.அழகப்பன், திருமணத்துக்குப் பிறகு படங்களில் நடிக்க வேண்டாம் என்று அமலாபால் முடிவு செய்திருந்தார். ஆனால் நடிகர் தனுஷ் தான் அம்மா கணக்கு படத்தில் அமலாபாலை நடிக்க வைத்தார். இதுதான் அமலாபால் - விஜய் விவாகரத்துக்கு முக்கியமான காரணம் என்றார்.

இந்நிலையில் இதுகுறித்து ஆந்திர பிரபா என்ற இணைய ஊடகத்துக்கு அமலாபால் பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில் அமலாபால் கூறியிருப்பதாவது, என் விவாகரத்து எப்போதோ நடந்து முடிந்த சம்பவம். அதைப் பற்றி இப்போது கேட்கிறீர்கள். இந்த சர்ச்சை தேவையில்லாதது.


விவாகரத்துக்கான முடிவு என்னுடைய சொந்த முடிவு. அதற்கு வேறு யாரும் பொறுப்போ காரணமோ இல்லை. வேறு ஒருவரைக் காரணமாக வைத்து யாராவது விவாகரத்து செய்வார்களா? தனுஷ் என்னுடைய நலம் விரும்பி. இது குறித்து என்னிடம் வேறு எதையும் கேட்க வேண்டாம். நானும் அதைப்பற்றி பேச விரும்பவில்லை” என்றார்.

மேலும் தற்போது ஒருவருடன் காதலில் இருப்பதாக சொன்னீர்களே என்ற கேள்விக்கு பதிலளித்த அமலாபால், என் கைவசம் உள்ள படங்களை முடித்த பிறகு, காதலை சொன்னது போல் முறையாக திருமணத்தையும் அறிவிப்பேன். அதற்கு இன்னும் காலமிருக்கிறது” என்றார்.

மேலும் படிக்க: இளம் வயதில் மரணமடைந்த இயக்குநர் ராஜ் கபூரின் மகன்... சோகத்தில் குடும்பத்தினர்


First published: February 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்