Home /News /entertainment /

மகேஷ்பாபு படத்தில் வில்லனாக நடிக்கும் விக்ரம்...?

மகேஷ்பாபு படத்தில் வில்லனாக நடிக்கும் விக்ரம்...?

மகேஷ்பாபு, விக்ரம்.

மகேஷ்பாபு, விக்ரம்.

விக்ரம் நடிப்பில் சமீபத்தில் மகான் திரைப்படம் வெளியானது. இதையடுத்து பொன்னியின் செல்வன், கோப்ரா, துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கின்றன. 

  • News18
  • Last Updated :
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் படத்தில் விக்ரம் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்ற செய்தி கடந்த இரு தினங்களாக திரையுலகில் சுற்றிக்கொண்டிருக்கிறது.

நாயகனாக நடித்து கொண்டிருப்பவர்களை வில்லனாக்குவதுதான் இப்போதைய ட்ரெண்ட். இந்தியின் முன்னணி நாயகனாக இருக்கும் அக்ஷய் குமாரை ஷங்கர் தனது 2.0 திரைப்படத்தில் வில்லனாக நடிக்க வைத்தார். விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்தார்.

சமீபத்தில் வெளியான தெலுங்கு திரைப்படம் புஷ்பாவில் மலையாளத்தின் முன்னணி நாயகனான பகத் பாசில் வில்லனாக நடித்திருந்தார். வரவிருக்கும் கேஜிஎப் 2 திரைப்படத்தில் இந்தியின் முன்னணி நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார்.

அதேபோல் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபரில் இந்தியில் நாயகனாக நடித்துவரும் விவேக் ஓபராய் வில்லனாக நடித்திருந்தார். ஒரு மொழியில் நாயகனாக நடிப்பவர்களை இன்னொரு மொழியில் வில்லன் ஆக்குவது இந்திய சினிமாவின் டிரெண்ட் ஆகி வருகிறது.

இந்நிலையில் மகேஷ்பாபுவின் அடுத்த திரைப்படத்தில் விக்ரம் வில்லனாக நடிக்கலாம் என்கின்றன தகவல்கள். மகேஷ்பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா திரைப்படம் ஜூன் மாதம் திரைக்கு வருகிறது.

இதையடுத்து அவர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்கிறார். சுமார் 11 வருடங்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் இணைகிறார்கள். இந்த படத்தில்தான் விக்ரம் வில்லனாக நடிக்கலாம் என்கின்றன தகவல்கள். இதனை சம்பந்தப்பட்டவர்கள் இதுவரை உறுதி செய்யவில்லை.

Also read... Valimai: சென்னையில் ரசிகர்களுடன் வலிமை படம் பார்த்த ஹுமா குரோஷி, கார்த்திகேயா, போனிகபூர்

விக்ரம் நடிப்பில் சமீபத்தில் மகான் திரைப்படம் வெளியானது. இதையடுத்து பொன்னியின் செல்வன், கோப்ரா, துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கின்றன. இரஞ்சித் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க இருக்கிறார். தமிழில் இப்படி பிஸியாக நடிக்கும் விக்ரம் தெலுங்கில் வில்லனாக நடிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vikram, Mahesh babu

அடுத்த செய்தி