ரஜினிகாந்தின் 170-வது படத்தை போனி கபூர் தயாரிப்பதாக தகவல்கள் தீயாய் பரவின. அதுகுறித்து போனிகபூரே விளக்கம் அளித்துள்ளார்.
அண்ணாத்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் தனது 169 வது படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை பீஸ்ட் படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் பணியாற்றும் மற்ற தொழில் நுட்ப கலைஞர்களின் விபரம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் ரஜினியின் 170வது படத்தை போனி கபூர் தயாரிக்கவுள்ளதாகவும் அருண் ராஜா காமராஜ் இந்தப் படத்தை இயக்கப் போவதாகவும் இன்று தகவல்கள் பரவின. இந்த தகவலை ஏராளமானோர் பகிர்ந்ததால் சினிமா உலகில் பரபரப்பு காணப்பட்டது.
இதையும் படிங்க -
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகினார் கமல்ஹாசன்! காரணம் இதுதானாம்...
இதுகுறித்து தயாரிப்பாளர் போனி கபூர் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது பதிவில், ரஜினிகாந்த் என்னுடைய நீண்ட நாள் நண்பராக இருந்து வருகிறார். வழக்கமாக நாங்கள் சந்திப்பதுடன், சினிமா குறித்த எங்களது கருத்துக்களை பரஸ்பரம் பகிர்ந்தும் வருகிறோம். ஒருவேளை நாங்கள் இருவரும் இணைந்து படம் பண்ணுவதாக இருந்தால், அதனை நானே முதலில் அறிவிப்பேன். தற்போது பரவும் தகவல் போல, கசிந்த தகவல்கள் உங்களுக்கு வராது. எனவே தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க -
''தான் விரும்பியதை படமாக்க எச்.வினோத் எந்த எல்லைக்கும் செல்வார்'' : போனி கபூர்
ரஜினியின் 170வது படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்குவதாக வதந்தி பரவியது. இவர்தான் போனி கபூர் தயாரிப்பில் உதயநிதி நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.