முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அட்லி, ஷாருக்கான் இணையும் படத்தின் பெயர் என்ன தெரியுமா?

அட்லி, ஷாருக்கான் இணையும் படத்தின் பெயர் என்ன தெரியுமா?

அட்லி, ஷாருக்கான்

அட்லி, ஷாருக்கான்

ஒரு படம் அண்டர்புரொடக்ஷனில் இருக்கையில் தற்காலிகமாக ஏதாவது பெயர் சூட்டுவது வழக்கம்.

  • Last Updated :

ஷாருக்கான் நடிக்கும் இந்திப் படத்தை அட்லி இயக்கி வருகிறார். புனேயில் இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

படத்தின் முதல்நாள் படப்பிடிப்பில் நயன்தாரா, ப்ரியாமணி ஆகியோர் கலந்து கொண்டனர். அதன்பிறகு கேரளா சென்ற நயன்தாரா, அல்போன்ஸ் புத்திரனின் கோல்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்தப் படத்தின் பெயர் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும், அதில் ஒருவர் ராணுவ அதிகாரி எனவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால், படத்துக்கு ஜவான் என்ற பெயரை தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியானது. அனால், இப்போது கிடைத்திருக்கும் தகவல் முற்றிலும் வேறானது

புனே மெட்ரோ ரயில் நிலையத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி கேட்டு கார்ப்பரேஷனுக்கு  படக்குழு சார்பில்  கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் படத்தின் பெயர் லயன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, படத்தின் பெயர் ஜவான் அல்ல லயன் என்பது தெரியவந்துள்ளது. . இந்தியில் ஏற்கனவே சிங்ஹம், சிம்பா என்ற பெயர்களில் படங்கள் வெளிவந்துள்ளன. லயன் இதுதான் முதல்முறை.

Also read... அண்ணாத்த படத்தின் உரிமையை வாங்கிய உதயநிதி...?

top videos

    ஒரு படம் அண்டர்புரொடக்ஷனில் இருக்கையில் தற்காலிகமாக ஏதாவது பெயர் சூட்டுவது வழக்கம். அதனால், லயன்கூட படத்தின் பெயர்தானா என்பதை அதிகாரப்பூர்வமாக அவர்கள் அறிவிக்கும்போதே உறுதி செய்ய முடியும்

    First published:

    Tags: Shah rukh khan