Home /News /entertainment /

நடிகை அனுஷ்காவின் சொத்து மதிப்பு இவ்வளவா? - இணையத்தில் கசிந்த தகவல்

நடிகை அனுஷ்காவின் சொத்து மதிப்பு இவ்வளவா? - இணையத்தில் கசிந்த தகவல்

நடிகை அனுஷ்கா

நடிகை அனுஷ்கா

அனுஷ்கா மீண்டும் சினிமாவில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார். விரைவில் அவர் நடிக்கும் படங்கள் குறித்த அறிவிப்பு வெளிவர உள்ளது.

  • News18
  • Last Updated :
நடிகை அனுஷ்காவின் சொத்து மதிப்பு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அனுஷ்கா அடிப்படையில் யோகா டீச்சர். 2005 இல் வெளியான சூப்பர் தெலுங்குப் படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தார். 2006 இல் தமிழில் ரெண்டு படத்தில் நடித்தார். யாரும் கண்டுகொள்ளவில்லை. தெலுங்குப் படங்களில் நடித்து முன்னணி நடிகையான பிறகு விஜய்யின் வேட்டைக்காரனில் நடித்தார். அதன் பிறகே அனுஷ்கா தமிழில் அறியப்பட்டார். சிங்கம் படம் அவரை கடைகோடிவரை கொண்டு சேர்த்தது.

அருந்ததி படம் அனுஷ்காவின் இன்னொரு பரிமாணத்தை வெளிக்கொண்டு வந்தது. விஜயசாந்திக்குப் பிறகு தெலுங்கில் ஹீரோக்களுக்கு இணையாகப் பேசப்பட்ட நடிகையானார். பாகுபலி முதல் பாகத்துக்குப் பிறகு அவர் நடித்த சைஸ் ஸீரோ (தமிழில் இஞ்சி இடுப்பழகி) அனைத்தையும் புரட்டிப் போட்டது.

அந்தப் படத்துக்காக உடல் எடையை அதிகரித்தவரால் அதனை உடனடியாக குறைக்க முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டார். கஷ்டப்பட்டு உடம்பை குறைத்த பின்பும் அவரால் அதனை மெயின்டெயின் செய்ய முடியவில்லை. படங்களில் நடிப்பதை குறைத்தார். இப்போது அவர் கைவசம் எந்தப் படமும் இல்லை.

இப்படியொரு சூழலில் அனுஷ்காவின் சொத்து மதிப்பு 110 கோடிகள் என இணையத்தில் செய்தி வெளியாகி பரபரப்பானது. அனுஷ்காவுக்கு சொந்தமாக ஹைதராபாத், பெங்களூருவில் பங்களாக்கள் உள்ளன. பிஎம்டபுள்யூ உள்ளிட்ட சொகுசு கார்கள் பல வைத்துள்ளார். அத்துடன் கோடிக்கணக்கில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளார். ஷேர் மார்க்கெட்டிலும் அவர் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Also read... தனுஷ் இணைந்து நடிக்க ஆசைப்படும் இந்தி நடிகர்

இதனால், படத்தில் நடிக்காவிடினும் அனுஷ்காவுக்கு வருமானம் வந்து கொண்டிருக்கிறது. அவரது அசையும், அசையா சொத்துகளின் மதிப்பு 110 கோடிகள் என மதிப்பிட்டிருக்கிறார்கள்.

அனுஷ்கா மீண்டும் சினிமாவில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார். விரைவில் அவர் நடிக்கும் படங்கள் குறித்த அறிவிப்பு வெளிவர உள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actress Anushka

அடுத்த செய்தி