• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Amala Paul: அமலா பாலின் வெப் சீரிஸ் கொரிய படத்தின் தழுவலா....?

Amala Paul: அமலா பாலின் வெப் சீரிஸ் கொரிய படத்தின் தழுவலா....?

அமலா பால்

அமலா பால்

போலீஸ் அதிகாரியான அமலா பாலும், உணவு டெலிவரி செய்யும் இளைஞனும் இதேபோல் ஒரு நாளைக்குள் சிக்கிக் கொள்வார்கள்.

  • Share this:
    அமலா பால் நடிப்பில் ’குடி எடமைதே’ என்ற தெலுங்கு வெப் சீரிஸ் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. லூசியா, யு டர்ன் போன்ற முக்கியமான திரைப்படங்களை இயக்கிய பவன் குமார் இதனை இயக்கி உள்ளார். மொத்தம் 8 எபிசோடுகளை கொண்ட வெப் சீரிஸ் இது.

    ‘குடி எடமைதே’ வெப் தொடர் கொரிய படமொன்றை தழுவி எடுக்கப்பட்டிருப்பதாக சில விமர்சகர்கள் கூறியுள்ளனர். உண்மையில் இது கொரிய திரைப்படத்தின் தழுவலா?

    2017-ல் வெளியான தென் கொரிய திரைப்படம் ஏ டே. இந்தப் படத்தில் வெளியூர் சென்ற இளம் மருத்துவர் விமானத்தில் வீடு திரும்புவார். அந்த நேரம் விபத்து ஒன்றில் அவரது மகளும், இன்னொரு பெண்மணியும் இறந்து போவார்கள். கண் விழித்தெழும் மருத்துவர் மீண்டும் அதே தினம் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிப்பதை உணருவார். அதாவது, விபத்து நடந்த அதே தினத்தின் நிகழ்வுகள் மறுபடியும் ஆரம்பத்திலிருந்து நடக்க ஆரம்பிக்கும். அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியும் என்பதால், மருத்துவர் விபத்து ஏற்படும் முன் மகளை காப்பாற்ற முயற்சி செய்வார். ஆனால், முடியாது. மீண்டும் அதே தினம் மறுபடியும் ஆரம்பிக்கும்.

    மருத்துவரைப் போலவே அவரது மகளுடன் உயிரிழந்த பெண்ணின் கணவனும் அதே தினத்தில் சிக்கிக் கொண்டிருப்பான். இருவருமாக விபத்தை ஏற்படுத்தியவனை தடுக்க முயற்சிப்பார்கள். அவனும் அதே தினத்தில் சிக்கிக் கொண்டிருப்பான். அது எதேச்சையாக நடந்த விபத்து அல்ல, அவன் திட்டமிட்டு ஏற்படுத்திய விபத்து. ஏன் என்பதற்கு பிளாஷ்பேக்கில் அழுத்தமான ஒரு கதை சொல்லப்படும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    டைம் லூப் எனப்படும், குறிப்பிட்ட நேரத்திற்குள் மனிதர்கள் சிக்கிக் கொள்ளும் திரைக்கதை யுக்தியில் ஏ டே திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கும். அமலா பாலின் குடி எடமைதே வெப் தொடரும் இதே டைம் லூப் திரைக்கதை யுக்தியில் எழுதப்பட்ட கதை. போலீஸ் அதிகாரியான அமலா பாலும், உணவு டெலிவரி செய்யும் இளைஞனும் இதேபோல் ஒரு நாளைக்குள் சிக்கிக் கொள்வார்கள். ஏ டே திரைப்படத்தில் ஒரேயொரு சம்பவமே பிரதானமாக வரும்.

    அமலா பால் ஒரு போலீஸ் அதிகாரியின் மரணம் குறித்து விசாரணை நடத்திக் கொண்டிருப்பார். தொடர்ச்சியாக குழந்தைகளை கிட்நாப் செய்யும் கும்பலையும் தேடிக் கொண்டிருப்பார். அந்த இளைஞன் ஒருத்தியை காதலிப்பான், அவன் நண்பன் விபத்தில் சிக்கிக் கொள்வான், ஒரு பெண் தற்கொலை செய்து கொள்வாள். இதேபோல் பல கதைகள். ஏ டே கதைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. டைம் லூப் என்ற திரைக்கதை பாணியில் இரண்டும் ஒத்திருப்பதால் ஏ டேயின் தழுவல் குடி எடமைதே என சிலர் தவறாக எழுதி வருகின்றனர்.

    விறுவிறுப்பான த்ரில்லரை விரும்புகிறவர்கள் குடி எடமைதேயை பார்க்கலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: