ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நடிகை ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பமா? புதிய புகைப்படம் வைரல்

நடிகை ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பமா? புதிய புகைப்படம் வைரல்

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய் – நடிகர் அபிஷேக் பச்சன் ஆகியோரது திருமணம் கடந்த 2007-ல் நடந்தது. இவர்களுக்கு ஆராத்யா என்ற 10 வயது மகள் உள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகை ஐஸ்வர்யா ராய் இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்திருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியுள்ளது.

ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் அடுத்த வாரம் வெள்ளியன்று திரைக்கு வரவுள்ளது. இதையொட்டி படக்குழுவினர் படத்தை விளம்பரப்படுத்தும் நடவடிக்கையில் மும்முரமாக உள்ளனர்.

மும்பை மற்றும் ஐதராபாத்தில் நடைபெற்ற புரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராய் பங்கேற்றார். ஐதராபாத் செல்வதற்காக ஐஸ்வர்யா ராய் மும்பை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வந்தார்.

கர்ப்பம் அடைந்தாரா நயன்தாரா? விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஃபோட்டோவால் ரசிகர்கள் உற்சாகம்

இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. இதனைப் பார்த்தவர்கள் ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பம் அடைந்திருப்பதாக கமென்ட் செய்துள்ளனர்.

ஐஸ்வர்யா ராய்

‘ஐஸ்வர்யா ராய் கர்ப்பம் அடைந்திருப்பது போல்தெரிகிறது. நிச்சயமாக குட் நியூஸ் விரைவில் வரும்’ என்று ஒருவர் கூறியுள்ளார். இன்னொருவர் 2வது பேபி வரப்போகிறது என்று கமென்ட் செய்துள்ளார்.இதுபோல் ரசிகர்கள் பலரும் ஐஸ்வர்யா ராயை வாழ்த்தி பதிவிட்டு வருகின்றனர்.

ஐஸ்வர்யா ராய் – நடிகர் அபிஷேக் பச்சன் ஆகியோரது திருமணம் கடந்த 2007-ல் நடந்தது. இவர்களுக்கு ஆராத்யா என்ற 10 வயது மகள் உள்ளார்.

நெருங்கும் பொன்னியின் செல்வன் ரிலீஸ்.. சபரிமலை சென்று வந்த நடிகர் ஜெயம் ரவி!

பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய், நந்தினி என்ற கேரக்டரில் நடித்துள்ளார். இந்த நாவல் மற்றும் திரைப்படத்தில் நந்தினி மிகவும் பவர்ஃபுல்லான கேரக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன் படத்தின் வெளியீட்டிற்கு பின்னர் ஐஸ்வர்யா ராயின் கதாப்பாத்திரம் மிகப்பெரும் வரவேற்பை பெறும் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Published by:Musthak
First published:

Tags: Aishwarya Rai, Ponniyin selvan