’நயன்தாரா விரைவில் இயக்குநர் அவதாரம் எடுப்பார்’- இயக்குநர் மோகன் ராஜா

'அடுத்ததாக தனி ஒருவன் இரண்டாம் பாகத்திலும் நயன்தாராவே நாயகியாக உள்ளார்'.

’நயன்தாரா விரைவில் இயக்குநர் அவதாரம் எடுப்பார்’- இயக்குநர் மோகன் ராஜா
நடிகை நயன்தாரா
  • News18
  • Last Updated: September 16, 2019, 1:39 PM IST
  • Share this:
நடிகை நயன்தாரா விரைவில் இயக்குநர் அவதாரம் எடுப்பார் என இயக்குநர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, ப்ராண்ட் அவதார் மற்றும் நேச்சுரலஸ் இணைந்து வழங்கிய ‘சுயசக்தி விருதுகள் மூன்றாம் ஆண்டு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்தது. தமிழகத்தில் பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் ஒரு அங்கீகார விழாவாக இந்நிகழ்வு நடைபெற்றது. பல துறை சார்ந்து வீட்டிலிருந்தே சுயதொழில் செய்து வெற்றி கண்டுவரும் பெண்களுக்கான கலை விழாவாக அமைந்தது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று இயக்குநர் மோகன் ராஜா விருது அளித்தார். தன் சினிமா வாழ்க்கையை மேம்படுத்திய பெண்கள் குறித்துப் பேசிய மோகன் ராஜா, “அசின் முதல் நயன்தாரா வரையில் என் நாயகிகள் இல்லாமல் என் வெற்றி சாத்தியமாகி இருக்காது” எனக் குறிப்பிட்டார். மேலும், தற்போது தான் இயக்கி வரும் ஒரு திரைப்படத்தில் நடித்து வரும் நடிகை நயன்தாரா குறித்துப் பேசுகையில், “சினிமாவில் பெரும் அனுபவம் நிறைந்த நடிகையாகவே நயன்தாரா உள்ளார். அவரது தேர்வுகளிலும் முடிவுகளிலும் அவ்வளவும் நேர்த்தி வெளிப்பட்கிறது.


நடிப்பில் மட்டுமல்லாது சினிமா சார்ந்த அத்தனைத் தொழில்நுட்பங்களிலும் மிகந்த தேர்ச்சியோடு நயன்தாரா இருக்கிறார். இதனால் அவர் விரைவில் இயக்குநர் அவதாரம் எடுப்பார் என்றே நினைக்கிறேன். அதற்கான அத்தனைத் தகுதிகளையும் வளர்த்துக்கொண்டுள்ளார். அடுத்ததாக தனி ஒருவன் இரண்டாம் பாகத்திலும் நயன்தாராவே நாயகியாக உள்ளார்” எனப் பேசினார்.

நடிகை நயன்தாரா தற்போது தர்பார் படபிடிப்பில் பிஸியாக இருக்கிறார். தீபாவளியன்று விஜய் உடனான பிகில், அதைத்தொடர்ந்து தெலுங்கில் சயிரா நரசிம்மா ரெட்டி ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இதற்கிடையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் ‘நெற்றிக்கண்’ என்றதொரு படத்திலும் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார்.

மேலும் பார்க்க: யூ டியூப் படையுடன் விஜய்
First published: September 16, 2019, 12:36 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading