ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இர்பான் பதானை வழியனுப்பி வைத்த கோப்ரா படக்குழு

இர்பான் பதானை வழியனுப்பி வைத்த கோப்ரா படக்குழு

இர்பான் பதான்

இர்பான் பதான்

கோப்ரா திரைப்படத்தில் விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா, கேஎஸ் ரவிக்குமார், மிருணாளினி ரவி, மம்முக்கோயா, ஆனந்த்ராஜ், ரேணுகா, ரோபோ ஷங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். 

  • News18
  • 1 minute read
  • Last Updated :

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கிவரும் கோப்ரா படத்தில் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிக்கிறார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் நேற்றுடன் முடிந்த நிலையில் அவரை கோலாகலமாக வழியனுப்பி வைத்துள்ளது படக்குழு.

விக்ரம் நடிப்பில் இரண்டு படங்கள் பல வருடங்களாக அண்டர் புரெடக்ஷனில் உள்ளன. ஒன்று கௌதம் இயக்கும் துருவ நட்சத்திரம். இன்னொன்று அஜய் ஞானமுத்துவின் கோப்ரா. இதில் கோப்ர திரைப்படத்தில் விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து முடித்ததாக சில வாரங்கள் முன்பு அறிவித்தனர்.

நாயகன் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிவடைந்ததால் படமும் முடிவடைந்திருக்கும் என்றே அனைவரும் நம்பினர். ஆனால் நேற்றுதான் படத்தில் நடித்த இர்பான் பதான் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்திருக்கிறார்கள்.

அவரை மொத்தப் படக்குழுவும் சேர்ந்து கோலாகலமாக வழி அனுப்பி வைத்துள்ளது. அந்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கும் அஜய் ஞானமுத்து, "உங்களை சந்தித்ததில், உங்களுடன் வேலை செய்ததில் மகிழ்ச்சி. அவ்வளவு அற்புதமான அன்பான மனிதர் நீங்கள். இது மறக்க முடியாத பயணம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Also read... கஜோல் நடிப்பில் சலாம் வெங்கி திரைப்படத்தை தொடங்கிய நடிகை ரேவதி

கோப்ரா திரைப்படத்தில் விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா, கேஎஸ் ரவிக்குமார், மிருணாளினி ரவி, மம்முக்கோயா, ஆனந்த்ராஜ், ரேணுகா, ரோபோ ஷங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர்.  ஏ.ஆர். ரஹ்மான் படத்துக்கு இசையமைக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித் குமார் படத்தை தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஒரு டஜனுக்கும் மேல் கெட்டப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. விக்ரம் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படங்களில் இதுவும் ஒன்று.

First published:

Tags: Actor Vikram, Irfan Pathan