Home /News /entertainment /

‘இரவின் நிழல்’ படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட ஏ.ஆர். ரகுமான்… பார்த்திபனின் நெகிழ்ச்சி பதிவு

‘இரவின் நிழல்’ படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட ஏ.ஆர். ரகுமான்… பார்த்திபனின் நெகிழ்ச்சி பதிவு

இரவின் நிழல் படத்தின் போஸ்டர்

இரவின் நிழல் படத்தின் போஸ்டர்

யூடியூபில் வெளியிடப்பட்டுள்ள இந்த படத்தின் ட்ரெய்லருக்கு வாழ்த்துக்கள் குவிந்துள்ளன.

பார்த்திபன் நடிப்பில், இயக்கத்தில் உருவாகியுள்ள இரவின் நிழல் படத்தின் ட்ரெய்லரை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை எடுப்பதில் முன்னணியில் இருப்பவர் பார்த்திபன். இவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளிவந்த ஒத்த செருப்பு திரைப்படம் விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றது.

பல்வேறு விருதுகளை குவித்த ஒத்த செருப்பு திரைப்படம் சர்வதேச அளவில் பாராட்டுக்களைப் பெற்றது. இந்நிலையில் தனது அடுத்த வித்தியாசமான முயற்சியாக இரவின் நிழல் என்ற படத்தை பார்த்திபன் எடுத்துள்ளார்.

இதையும் படிங்க - ராக்கியின் அம்மாவா இது! KGF பட நடிகையின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்... 

சுமார் 100 நிமிடங்கள் ஓடும் இந்த திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

இரவின் நிழல் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மற்ற படங்களை விட, இரவின் நிழல் படத்தின் போஸ்டரில், ஏ.ஆர். ரகுமான் ஆஸ்கர் விருது வாங்கியதை குறிப்பிடும் வகையில் அகாடமி அவார்டு வின்னர் என்று ஏ.ஆர்.ரகுமானை பார்த்திபன் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க - ’சூப்பர் டீலக்ஸ்’ முதல் ’நவரசா’ வரை... தமிழ் சினிமாவை ஆக்கிரமித்த ஆந்தாலஜி!

இந்த நிலையில் இரவின் நிழல் படத்தின் ட்ரெய்லரை ஏ.ஆர். ரகுமான் இன்று வெளியிட்டுள்ளார்.  இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஒரே ஒரு பாட்டுக்கு tune பண்றேன்னு நீங்க பாட்டுக்கு படத்தையே நல்படைப்பாய் tune பண்ணி,உங்கள் dedication கண்டு கலங்கி நிற்கும் நான் இந்த tweet-க்கு பின் என்ன எழுத? என்று ட்விட்டரில் நெகிழ்ச்சிபட கூறியுள்ளார்.





நாளை முதல் திரையரங்குகளில் இரவின் நிழல் ட்ரெய்லர் வெளியிடப்படுகிறது.

ட்ரெய்லரைப் பார்க்க...



யூடியூபில் வெளியிடப்பட்டுள்ள இந்த படத்தின் ட்ரெய்லருக்கு வாழ்த்துக்கள் குவிந்துள்ளன.
Published by:Musthak
First published:

Tags: Actor Parthiban, AR Rahman

அடுத்த செய்தி