Home /News /entertainment /

நிர்வாண காட்சியில் நடித்தது ஏன்? இரவின் நிழல் பட நடிகை பிரிகிடா விளக்கம்

நிர்வாண காட்சியில் நடித்தது ஏன்? இரவின் நிழல் பட நடிகை பிரிகிடா விளக்கம்

நடிகை பிரிகிடா

நடிகை பிரிகிடா

iravin nizhal brigida : ‘நானும், பார்த்திபன் சாரும் எனது பெற்றோரிடம் பேசியபோது பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்’

    இரவின் நிழல் படத்தில் நிர்வாண காட்சியில் நடித்தது குறித்து நடிகை பிரிகிடா விளக்கம் அளித்துள்ளார். இன்று வெளியாகியுள்ள இரவின் நிழல் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

    நடிகர் இயக்குனர் பார்த்திபன் வித்தியாசமான முயற்சியில் உருவாகியுள்ள, இரவின் நிழல் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் ஏற்கனவே திரையிடப்பட்ட இந்த திரைப்படம், விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்று இருந்தது.

    இந்நிலையில் இன்று காலை 5 மணி முதல் காட்சியுடன், இரவு நிழல் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. படத்தைப் பார்த்தவர்கள் நன்றாக இருப்பதாக கூறி பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். இதனால் படக்குழுவினர் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

    சிவகார்த்திகேயனின் 22வது பட டைட்டில் வெளியானது… வரவேற்பை பெறும் அறிவிப்பு வீடியோ

    இந்தப்படத்தில் நடிகை பிரிகிடா முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். குறிப்பாக நிர்வாணக் காட்சி ஒன்றில் பிரிகிடா நடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

    இதுகுறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது-

    இரவின் நிழல் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு அப்படிப்பட்ட ஒரு காட்சி தேவைப்பட்டது. இதை என்னிடம் பார்த்திபன் சார் விவரித்தார். அதனை பெற்றோரிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது? என்ற தவிப்பில் இருந்தேன்.

    சேலை அணிந்து சென்றாலே சரியாக இருக்கிறதா? என பல முறை சரி பார்த்துக் கொள்ளும் பெண்தான் நான். ஆனால் இரவின் நிழல் படத்தில் நான் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் மிகவும் புனிதமானது. அப்படி ஒரு விஷயம் நடக்கும் போது, அந்த கோலத்தில் இருந்தால் தான் சரியாக இருக்கும் என பார்த்திபன் சார் புரியவைத்தார்.

    நானும், பார்த்திபன் சாரும் எனது பெற்றோரிடம் பேசியபோது பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். அதன்பின்னர் அந்த காட்சியை எடுத்து முடித்தோம். படத்தில் பார்ப்பவர்களுக்கு அந்த காட்சி, கிளாமராக தெரியாது. பலரையும் அது ஆச்சரியப்படுத்தும் வகையில் அந்த காட்சி அமைந்திருக்கும். எனது கேரக்டரில் உள்ள புனிதத்தன்மை மட்டுமே ரசிகர்களை சென்றடையும்.

    Maaveeran Title Announcement | எதிர்த்து நின்றான் மாவீரன்... வெளியானது சிவகார்த்திகேயனின் டைட்டில் வீடியோ!

    இவ்வாறு கூறியுள்ளார். ‘ஆஹா கல்யாணம்’ என்ற வெப் சீரிஸில் பவி டீச்சர் என்ற கேரக்டரில் பிரிகிடா நடித்திருக்கிறார். இதன்மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood

    அடுத்த செய்தி