இரவின் நிழல் படத்திற்கு தற்போது வரையில் 115 சர்வதேச விருதுகள் கிடைத்திருப்பதாக நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.
ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு பிறகு பார்த்திபன் இயக்கி நடித்த திரைப்படம் இரவின் நிழல். இந்த திரைப்படத்தை ஒரு சாதனை முயற்சியாக ஒரே ஷாட்டில் படமாக்கி இருந்தார் பார்த்திபன்.
சமூகத்தில் ஒருவனின் பசி,பசி சார்ந்த பிரச்சனை மற்றும் அவனின் கருப்பு பக்கம் ஆகியவற்றை மையப்படுத்தி இரவின் நிழல் திரைப்படத்தை எடுத்திருந்தார் பார்த்திபன். அத்துடன் எந்த சூழலிலும் பாவம் செய்யக்கூடாது. அப்படி செய்தால் என்ன ஆகும் என்பதை கூற முயற்சித்து இருப்பார்.
50 வயது மனிதனின் பல்வேறு வயது காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களை Non linear முறையில் திரைக்கதை அமைத்து படமாக்கி இருந்தனர். 94 நிமிடம் 36 நொடிகள் ஒரே ஷாட்டில் படமாக்கப்படுவதால் நடிகர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்துள்ளது. ஏ.ஆர். ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.
தற்காப்புக் கலை மன்னன் நடிகர் புரூஸ் லீ பற்றிய அரிய தகவல்கள்
இரவின் நிழல் திரைப்படம் சர்வதேச திரைப்பட திருவிழாக்கள் பலவற்றில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்றது. இந்நிலையில் இந்த படத்திற்கு 115 சர்வதேச திரைப்பட விருதுகள் கிடைத்திருப்பதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த திரைப்பட விழாவில் பங்கேற்று பார்த்திபன் பேசியதாவது-
இரவின் நிழல் திரைப்படத்திற்கு 115 சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளன. அதை மிகுந்த மகிழ்ச்சியுடன் இங்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன். அதை ஃப்ரேம் போட்டு மாட்டுவதற்காக ஆணி அடித்தோம்.
என் வீடு வாடகை வீடு. ஆணி அடிக்கும்போது வீட்டுக்காரர் வந்து சண்டை போட்டார். 115 ஆணியா அடிப்பீர்கள் என்று கேட்டார்.
வேற லெவல் ப்ளானில் லோகேஷ்.. விக்ரம் படம் போல மாஸ் ப்ரோமா.. தயாராகும் விஜய்!
ஒரு கோயிலின் மகிமை என்பது அதற்கு உள்ளே சென்று பார்த்தவர்களால் மட்டுமே உணர முடியும். அதுபோல ஒரு விருது எந்த அளவு உயர்ந்தது என்பதை அதை வாங்கியவர்களால் மட்டுமே உணர முடியும். 20 ஆண்டுகள் கழித்து கூகுள் செய்து பார்க்கும்போது கூட இரவின் நிழல் படம் அங்கு இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Parthiban