Home /News /entertainment /

என் பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டுவிட்டது... கண் கலங்கிய இரவின் நிழல் பிரிகிடா

என் பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டுவிட்டது... கண் கலங்கிய இரவின் நிழல் பிரிகிடா

இரவின் நிழல் பிரிகிடா

இரவின் நிழல் பிரிகிடா

2022-ல் சேரி மக்களிடம் உள்ள மாற்றம், கடுமையான போராட்டத்தில் அவர்கள் பெற்ற கல்வியினால். என் படங்கள் பெரும்பாலும் சேரி மக்களை hero ஆக்குவதே.

    தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகக் கூறி, செய்தியாளர் சந்திப்பில் கண்கலங்கியுள்ளார் இரவின் நிழல் படத்தின் நாயகி பிரிகிதா.

    நடிகர் பார்த்திபன் சிங்கிள் ஷாட்டில் எடுத்துள்ள இரவின் நிழல் திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், மற்றும் ஆஹா கல்யாணம் என்ற வெப் சீரிஸில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்ற பிரிகிதா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய பிரிகிதா, ”சேரிக்கு போனால் அந்த மாதிரி கெட்ட வார்த்தைகளை தான் கேட்க முடியும், அதை மாற்றி நாம் சினிமாவுக்காக ஏமாற்ற எல்லாம் முடியாது. மக்களுக்கே தெரியும் அங்கே எப்படி பேசுவார்கள் என்று" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அவரின் இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டிருந்தார் பிரிகிதா. இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், அந்த வார்த்தைகளை சொன்னதற்கு மன ரீதியாக வருந்துகிறேன். இரவின் நிழல் படத்தில், இடம் மாறும்போது, மொழியும் மாறுகிறது என்பதைத் தெரிவிக்க முயற்சித்தேன். அதற்காக நான் ஒரு தவறான உதாரணத்தை எடுத்துக்கொண்டேன். அதைச் சொன்னதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். நான் சினிமாவில் சாதிக்க விரும்பும் ஒரு சாதாரண பெண். எனது மன்னிப்பை ஏற்கவும்” என்று தெரிவித்திருந்தார்.

    தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட நடிகை செளந்தர்யா பிறந்த தினம்



    பிரிகிதாவின் இந்த ட்வீட்டை ரீட்வீட் செய்த பார்த்திபன், “Brigida சார்பாக நானும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், மனக்காயம் அடைந்தவர்களிடம். 1989-ல் நடக்கும் கதையிது. 2022-ல் சேரி மக்களிடம் உள்ள மாற்றம், கடுமையான போராட்டத்தில் அவர்கள் பெற்ற கல்வியினால். என் படங்கள் பெரும்பாலும் சேரி மக்களை hero ஆக்குவதே” என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரிகிதா, “இரவின் நிழல் படத்தின் மகிழ்ச்சியை இரண்டு நாள் கூட கொண்டாட முடியவில்லை. எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது” எனக் கூறி கண்கலங்கினார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Parthiban

    அடுத்த செய்தி