இரவின் நிழல் படத்தின் ஆடியோ லான்ச்சிற்கு வருபவர்களுக்கு படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான பார்த்திபன் புதிய கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளார். இந்த தகவல் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படமாக இரவின் நிழல் என்ற படத்தை பார்த்திபன் எடுத்துள்ளார். அது எப்படி ஒரே ஷாட்டில் படம் எடுக்கப்பட்டது என்று கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்துடன் பேசப்படுகிறது.
சமீபத்தில் நடந்த கேன்ஸ் விழாவில் பார்த்திபன் இந்த படத்தை திரையிட்டார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதையும் படிங்க - இயக்குநர் பாலாவுடன் சண்டையா? முற்றுப்புள்ளி வைத்த சூர்யா!
இரவின் நிழல் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருப்பதால் படத்தின் பிஸ்னஸ், எதிர்பார்ப்பு, தரம் உள்ளிட்டவை அடுத்த லெவலுக்கு சென்றுள்ளன.
இதையும் படிங்க - விக்ரம் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட தடை… சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
இந்நிலையில், ஜூன் 5ம் தேதி ஞாயிறன்று படத்தின் ஆடியோவை லான்ச் செய்வதற்கு பார்த்திபன் திட்டமிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் இரவின் நிழல் படத்தின் முதல் 30 நிமிட காட்சிகள் திரையிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இரவின் நிழல் படத்தின் ட்ரெய்லரைப் பார்க்க...
இதனால், படத்தின் காட்சிகள் சட்டவிரோதமாக லீக் ஆகுவதை தவிர்ப்பதற்காக, பார்த்திபன் அதிரடி முடிவை எடுத்துள்ளார். அதாவது இரவின் நிழல் ஆடியோ லான்ச்சின்போது மொபைல் போன்களுக்கு தடை விதிக்கப்படும் என்று அவர் அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள அழைப்பிதழ்களில், மொபைல் போனுக்கு தடை என்று பார்த்திபன் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தம் 100 நிமிடங்கள் ஓடக் கூடியதாக இரவின் நிழல் படம் எடுக்கப்பட்டுள்ளது. இதனை ஒரே ஷாட்டில் எடுப்பதற்காக படக்குழுவினர் 90 நாட்கள் ஒத்திகை மேற்கொண்டு, பின்னர் ஒரே ஷாட்டில் படத்தை எடுத்து முடித்துள்ளனர்.
இரவின் நிழல் படத்தில் பார்த்திபனுடன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரியங்கா ரூத், பிரிகிதா சகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.