இண்டர்நேஷனல் பாலிடிக்ஸ் பேசும் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ட்ரெய்லர்- வீடியோ!

news18
Updated: August 28, 2019, 5:05 PM IST
இண்டர்நேஷனல் பாலிடிக்ஸ் பேசும் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ட்ரெய்லர்- வீடியோ!
தினேஷ்
news18
Updated: August 28, 2019, 5:05 PM IST
இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

`பரியேறும் பெருமாள்' படத்தை தொடர்ந்து நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் படம் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு. அதியன் ஆதிரை இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் அட்டகத்தி தினேஷ் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார்.

இவர்களுடன் அனேகா, ரித்விகா லிஜீஷ், முனீஸ்காந்த், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்துள்ளனர்.


இந்தப் படத்தின் மூலம் தென்மா தமிழ்சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

முன்னதாக படத்தைப் பற்றி தினேஷ் கூறுகையில், படத்தைப் பற்றி தினேஷ் கூறுகையில், “‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’படத்தை உலகின் எந்த நிலப்பரப்போடும் தொடர்புபடுத்தினாலும் அது அந்த நிலப்பரப்போடு பொருந்திப்போகும். ஒரு இண்டர்நேஷனல் பாலிடிக்ஸ் இந்த படத்தில் இருக்கிறது.

அதேசமயம் ஜனரஞ்சகமாக அனைவரும் ரசிக்கும்படியும் , குடும்பங்கள் , இளைஞர்கள், எல்லோருக்குமான ஒரு படமாக வந்திருக்கிறது. என் சினிமா கேரியரில் ரொம்ப முக்கியமான படம். ஒரு லாரி ஓட்டுனரின் மன நிலையில் லாரி ஓட்டுனராக வட தமிழகத்து இளைஞனாக நடித்தது புதிய அனுபவம்” என்று கூறியிருந்தார்.

Loading...வீடியோ பார்க்க: அஜித் ரசிகர் எரித்து கொலை.. நண்பர்களே செய்த கொடூர சம்பவம்

First published: August 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...