ஐபிஎல் 2022-ன் இறுதி போட்டி நேற்று பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இதை நேரில் காண நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் வந்திருந்தனர். இறுதி போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் அணி வெற்றிப்பெற்றது. இந்நிகழ்ச்சியை மேலும் சிறப்பாக்க ஏ.ஆர்.ரஹ்மான், மோகித் சவுகன், நீத்தி மோகன், சாஷா திரிப்பாதி, ஸ்வேதா மோகன் என பலர் கலந்துக்கொண்டனர். அப்போது ஏ.ஆர்.ரஹ்மான் பல பாடல்களை பாடி அசத்தினார். குறிப்பாக அவர் பாடிய ‘ஜெய் ஹோ’ பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. ஏ.ஆர்.ரஹ்மான் பாடிக்கொண்டிருக்கும் போதே இடையில் ரன்வீர் சிங்கும் இணைந்துக்கொண்டார்.
மேலும் ரன்வீர் சிங் நடனமாடி அனைவரையும் மகிழ்வித்தார். ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு, மாஸ்டரில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் மற்றும் சில இந்தி பாடல்களுக்கும் நடனமாடினார். ஏற்கனவே இந்த நிகழ்ச்சிக்காக டான்ஸ் ப்ராக்டிஸ் செய்யும் வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார் ரன்வீர்.
இந்நிலையில் நிகழ்ச்சி நிறைவு பெற்றவுடன் ஏ.ஆர்.ரஹ்மான், ரன்வீர் சிங் மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர். இதை ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
மேலும் ஏ.ஆர்.ரஹ்மானின் மகனான ஏ.ஆர்.அமீன் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவையும் பதிவிட்டுள்ளார். அதில் ஏ.ஆர்.ரஹ்மான் அரங்கத்தை சுற்றி வரும் போது ரசிகர்கள் கத்தி கூச்சலிடுகின்றனர்.
இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Published by:Tamilmalar Natarajan
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.