மண்டேலா படம் பார்த்துவிட்டு யோகி பாபுவின் ரசிகரான ஐபிஎல் வீரர்

மண்டேலா படம் பார்த்துவிட்டு யோகி பாபுவின் ரசிகரான ஐபிஎல் வீரர்

நடிகர் யோகி பாபு

மண்டேலா படம் பார்த்த ஐபில் வீரர் ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி யோகி பாபுவுடன் வீடியோ காலில் உரையாடியுள்ளார்.

  • Share this:
ஒய்நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் வழங்க இயக்குநர் பாலாஜி மோகன் தயாரிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா ராஜ்குமார், சங்கிலி மருகன், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் விஜய் டிவியில் ரிலீசான படம் ‘மண்டேலா’. அதைத்தொடர்ந்து நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதால் முதல் படத்திலேயே தனக்கென தனி முத்திரை பதித்திருக்கிறார் இயக்குநர் மடோன் அஸ்வின்.

இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி மண்டேலா படம் பார்த்து விட்டு ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “சில நாட்களுக்கு முன்னர் மண்டேலா படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்த்தேன். யோகி பாபுவின் நடிப்பைக் கண்டு வியந்தேன். என்ன ஒரு நடிகர். என்ன ஒரு கதை. யோகி பாபு நடராஜனின் நண்பர் என்பதை அறிந்தேன். அவர் என்னை யோகி பாபுவுடன் வீடியோ காலில் பேச வைத்தார். ரசிகருக்கான தருணம் அது.” என்று கூறியுள்ளார்.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி இதுவரை 31 ஐபிஎல் மேட்ச்களில் விளையாடியுள்ளார்.

தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் மண்டேலா என்ற திரைப்படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் யோகி பாபு உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன்னர் புகாரளித்திருந்தனர்.
Published by:Sheik Hanifah
First published: