மேலை நாடுகளில் இருக்கும் Paid Premiere காட்சியை அறிமுகப்படுத்தினால் முதல் நாள் முதல் காட்சிக்கு வசூலிக்கப்படும் அதிக கட்டணத்தை முறைப்படுத்த வாய்ப்பு உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் திரைப்பட டிக்கெட் விற்பனையை முறைப்படுத்த அந்த மாநில அரசு சில அறிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் திரையரங்கு டிக்கெட் விற்பனையை அரசு இணைய தளங்கள் மூலம் விற்பனை செய்ய அறிவுறுத்தி வருகிறது. அதை முழுமையாக நடைமுறை படுத்துவதிலும் ஆந்திர அரசு ஆர்வம்காட்டி வருகிறது.
இந்த நிலையில் அந்த நடைமுறையை தமிழகத்திலும் அறிமுகப்படுத்த வேண்டும் என திரைப்பட ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். தமிழ் திரைப்பட தயாரிப்பளர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆந்திர மாநில முயற்சி பற்றி விவாதம் எழுந்துள்ள இந்த நிலையில், பெரிய படங்கள் வெளியீட்டின் போது அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்படுவதும் சர்ச்சை எழுந்து வருகிறது. இறுதியாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் முதல் காட்சிக்கும் சில இடங்களில் அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கார்த்திக் ரவிவர்மா
இது குறித்து திரைப்பட வெளியீடு மற்றும் விநியோக நிறுவனத்தில் பணியாற்றும் கார்த்திக் ரவிவர்மாவிடம் கேட்ட போது, தியேட்டர்களில் முதல் நாள் முதல் காட்சி அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது வருகிறது.
தமிழ்நாட்டில் 1050 திரையரங்குகள் உள்ளன. வருடம் 200 முதல் 250 வரையிலான திரைப்படங்கள் வெளியாகிறது. ஒட்டுமொத்தமாக அனைத்து திரையரங்குகளுமே 500, 1000 ரூபாய் டிக்கெட் வசூலிப்பதாக குற்றம் சாட்டுவது ஏற்புடையதல்ல.
உச்ச நடிகர்கள் 3 அல்லது 4 நடிகர்களின் படங்கள் வரும்போது மட்டுமே இது நடக்கிறது. குறிப்பிட்ட அந்த டாப் 3 உச்ச நடிகர்களின் படங்கள் சுமார் 600 முதல் 700 திரையரங்குகளில் வெளியாகிறது. அதில் 50 முதல் 100 திரையரங்குகளில் மட்டுமே இந்த 500/1000ரூ கலாச்சாரம் உள்ளது. அதுவும் முதல் நாள் முதல் காட்சியில் மட்டுமே, இதற்கு அடிப்படையில் ரசிகர்களின் மனநிலை தான் காரணம் என தெரிவிக்கிறார்.
மேலும் தனது அபிமான நடிகரின் படத்தை குறிப்பிட்ட தியேட்டரில் ஆரவாரத்துடன் முதல் நாள் முதல் காட்சி தான் பார்க்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். 500 இருக்கைகள் கொண்ட தியேட்டரில் 5000 ரசிகர்கள் போட்டி போடுவதால் டிக்கெட் கட்டணம் உயர்வை தவிர்க்க இயலாது என கார்த்தி ரவிவர்மா குறிப்பிடுகிறார்.
Also read... தமிழ் சினிமாவில் எதிரும் புதிருமான படப் பெயர்கள் - சுவாரஸ்யமான லிஸ்ட்
இதற்கான தீர்வு மேலை நாடுகளை போல சாதாரணமாக 5 முதல் 10 டாலர் வரை இருக்கும் டிக்கெட் கட்டணத்தை பெரிய நடிகர்களின் திரைப்பட வெளியீட்டின் போது முதல் நாள் முதல் காட்சியை பிரீமியர் ஷோ என்ற பெயரில் 15 முதல் 25 டாலராக அதிகாரப் பூர்வமாகவே உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
அது போலவே தமிழ்நாட்டிலும் பெரிய நடிகர்களின் படத்திற்கு முதன்முதலில் காட்சி டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி ஆன்லைன் மூலம் விற்பனை செய்தால் இத்தகைய குற்றச்சாட்டுகள் குறையும். அரசுக்கும் வருமானம் கூடும் என தெரிவிக்கிறார். இதை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.