விஸ்வாசம் பட கண்ணான கண்ணே பாடல் அந்தப் படத்துக்கு எப்படி பக்கபலமாக அமைந்ததோ, வாரிசு படத்துக்கு இந்த அம்மா பாடல் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய்யின் வாரிசு படம் பொங்கலை முன்னிட்டு வருகிற ஜனவரி 12 ஆம் தேதி திரைக்குவரவிருக்குகிறது. இந்தப் படத்திலிருந்து ரஞ்சிதமே, தீ தளபதி போன்ற பாடல்கள் வெளியான நிலையில் 3வதாக அம்மா பாடல் ஒன்று நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.
தமன் இசையில் விவேக் எழுதியுள்ள இந்தப் பாடலை சித்ரா பாடியுள்ளார். குடும்ப சென்டிமென்ட் காட்சிகள் நிறைந்த படமான வாரிசு படத்தில் அம்மா பாடல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 'விஸ்வாசம்' பட 'கண்ணான கண்ணே' பாடல் அந்தப் படத்துக்கு எப்படி பக்கபலமாக அமைந்ததோ, 'வாரிசு' படத்துக்கு இந்த அம்மா பாடல் அமையும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க | சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் அவதார் டெக்னீஷியன்கள்!
#SoulOfVarisu - #VarisuThirdSingle is releasing Tomorrow at 5 PM 😍
🎙️ @KSChithra mam
🎵 @MusicThaman
🖋️ @Lyricist_Vivek#Thalapathy @actorvijay sir @SVC_official @directorvamshi @iamRashmika @7screenstudio @TSeries #BhushanKumar #KrishanKumar #ShivChanana#Varisu #VarisuPongal pic.twitter.com/VPDXO5uD4P
— Sri Venkateswara Creations (@SVC_official) December 19, 2022
வம்சி இயக்கியுள்ள 'வாரிசு' படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, சரத்குமார், பிரபு, ஷாம், குஷ்பு, சங்கீதா, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பாக தில் ராஜு தயாரித்துள்ளார்.
'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் வருகிற டிசம்பர 24 ஆம் தேதி நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விழாவை பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜு ஜெயமோகன் தொகுத்து வழங்குகிறாராம். அன்றைய தினம் படத்தின் டீசரையும் எதிர்பார்க்கலாம் என்பது கூடுதல் தகவல்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.