குட்டி ஸ்டோரியில் மகளிர் தின வாழ்த்து - டிடியின் அசத்தல் வீடியோ

குட்டி ஸ்டோரியில் மகளிர் தின வாழ்த்து - டிடியின் அசத்தல் வீடியோ

திவ்யதர்ஷினி

தொகுப்பாளினியும் நடிகையுமான திவ்யதர்ஷினி விஜய்யின் குட்டி ஸ்டோரி ஸ்டைலில் மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 • Share this:
  இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரதமர், தமிழக முதல்வர் உள்ளிட்டோர் தொடங்கி பல்வேறுஅரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். அதேபோல் திரைத்துறை பிரபலங்கள் பலரும் சமூகவலைதளங்களில் வாழ்த்து செய்தி பகிர்ந்து வருகிறார்கள்.

  இந்நிலையில் தொகுப்பாளினியும், நடிகையுமான டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வடிவில் வித்தியாசமாக மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் மாஸ்டரின் குட்டி ஸ்டோரி பாடலை பின்னால் ஒலிக்க விட்டு தனது வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை உதாரணமாக காட்சிப்படுத்தியுள்ளார் திவ்யதர்ஷினி.

  தனக்கு 36 வயதானதாலும் தான் ஒரு சிங்கிள் என்றும், விவாகரத்து ஆனவர் என்றும், இதுவரை குழந்தை இல்லாதவர் என்றும் தெரிவித்திருக்கும் டிடி ஆனாலும் தான் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வொருவரது வாழ்க்கையும் வித்தியாசமானது என்றும் உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழ வேண்டும் என்றும் கூறியிருக்கும் டிடி சமூகம் உங்களை தோல்வியானவர் என தீர்மானிப்பதை அனுமதிக்க வேண்டாம் என்றும் கூறி மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது ட்விட்டரில், “ஒரு பெண் இருக்கும் இடத்தில் மேஜிக் இருக்கிறது. நீங்கள் அனைவரும் அழகான, வலுவான, கடுமையான சுதந்திரமான பெண்கள். உங்களுக்கு எனது மகளிர் தின வாழ்த்துகள்” என்று கூறியிருக்கிறார்.
  நடிகரும் பிக்பாஸ் வின்னருமான ஆரி, “என்னை பிள்ளையாக ஏற்றுக்கொண்ட அம்மாக்களுக்கும், தம்பியாக ஏற்றுக்கொண்ட அக்காக்களுக்கும், அண்ணனாக ஏற்றுக்கொண்ட தங்கைகளுக்கும், எனது மகளிர் தின நல்வாழ்த்துகள். என் வெற்றிக்காக உழைத்த
  அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.
  Published by:Sheik Hanifah
  First published: