Home /News /entertainment /

சர்வதேச இயக்குநர்களின் பெருங்கனவான கான்ஸ் பட விழா!

சர்வதேச இயக்குநர்களின் பெருங்கனவான கான்ஸ் பட விழா!

கான்ஸ் 2022

கான்ஸ் 2022

சர்வதேச படங்களுக்கான நிதி, படத்தை விநியோகம் செய்வது போன்ற தயாரிப்பாளர்களின், பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களுக்கும், கான்ஸ் திரைப்பட விழா வழி வகுக்கிறது.

  சர்வதேச திரை உலகின் ஒட்டுமொத்த கவனமும் 75-வது கான்ஸ் திரைப்பட விழாவின் மீது குவிந்துள்ள நிலையில், அந்நிகழ்வு ஆஸ்கருக்கும் மேலாக கொண்டாடப்படுவதற்கான காரணத்தை இங்கே குறிப்பிடுகிறோம்.

  அகில உலக திரையுலக நட்சத்திரங்களின் சங்கமம், கண்களை கவரும் வித்தியாசமான உடைகளில், சிவப்புக் கம்பளத்தில் ஒய்யாராகமாக நடந்து வரும் நடிகர், நடிகைகள்... இதுதான் 75 ஆண்டாக நடக்கும் கான்ஸ் விழாவின் அடையாளம். 1946 முதல் நடைபெறும் பழமையான மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த விழாவில் விருது வெல்வதுதான் உலக இயக்குநர்களின் பெருங்கனவாக உள்ளது. தங்களது படம் அங்கு திரையிடப்பட்டாலே அதற்கு பெரும் கவுரவத்துடன், வியாபாரத்தையும் உருவாக்கி தரும் என திரைத்துறையினர் நம்புகின்றனர்.

  பிரான்சு நாட்டின் கான் நகரில் ஒவ்வொரு ஆண்டின் மே மாதத்திலும் 12 நாட்கள் நடைபெறும் இந்த விழா, உலகின் நீண்ட நாட்கள் நடைபெறும் திரைப்பட விழா எனும் பெருமைக்கு உரித்தானது. ஒரு இந்திய திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு செல்ல வேண்டும் என்றால் முதலில் மத்திய அரசின் தேர்வுக் குழு படத்தை தேர்வு செய்து ஆஸ்கர் போட்டிக்கு பரிந்துரைக்கும். ஆனால், கான்ஸ் திரைப்பட விருதுக்கு, எந்தவொரு தனிநபரும் தனது படத்தை அனுப்பலாம். விழாவிற்கான இணையதளத்தில் சென்று ஒரு தனி கணக்கை தொடங்கி கட்டணத்தை செலுத்தி, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டியது மட்டுமே நாம் செய்ய வேண்டியது. தரமான படம் என்றால் அதற்கான அங்கீகாரம் அங்கு நிச்சயம் கிடைக்கும்.

  இந்த வகையில் கான்ஸ் திரைப்பட விழாவில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டாயிரத்திற்கும் அதிகமான படங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. அந்த அனைத்து படங்களும் தேர்வுக் குழுவால் பார்க்கப்பட்டு, 50 முழு நீள படங்கள், 10 குறும்படங்கள் மட்டுமே விருதுக்கான இறுதிச் சுற்றுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அவற்றை திரைப்பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளர்களை நடுவர்களாக கொண்ட, 8 பேர் கொண்ட குழு பார்வையிட்டு சிறந்த திரைப்படம் மற்றும் குறும்படத்தை தேர்வு செய்யும்.

  தெலுங்கு பிக் பாஸ் டைட்டிலை வென்ற பிந்து மாதவி!

  இந்த விழாவில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டாலும், கோல்டன் பாம் (palm) எனப்படும் தங்கப் பனை விருது மிக உயரியதாக கருதப்படுகிறது. 1990ம் ஆண்டு Sex, Lies and Videotape என்ற படத்திற்காக Steven Soderbergh-ம், 1994-ம் ஆண்டு Pulp Fiction திரைப்படத்திற்காக quentin tarantino-வும் தங்கப்பனை விருதை வென்று சர்வதேச அளவில் அங்கீகாரம் தேடிக் கொண்டனர். தற்போது அவர்கள்தான் திரைத்துறை மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மற்ற திரைப்பட விழாக்களை போன்று இது வெறும் விருது வழங்கும் நிகழ்ச்சியாக மட்டும் அமைவதில்லை. தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களது திரைப்பட தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ள பயன்படுகிறது. சர்வதேச படங்களுக்கான நிதி, படத்தை விநியோகம் செய்வது போன்ற தயாரிப்பாளர்களின், பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களுக்கும், கான்ஸ் திரைப்பட விழா வழி வகுக்கிறது. பிற சர்வதேச திரைப்பட விழாக்களை போன்று இல்லாமல், திரைத்துறையை சேர்ந்த அழைப்பிதழ் கிடைக்க பெற்றவர்கள் மட்டுமே கான்ஸ் விழாவில் பங்கேற்க முடியும். அவ்வாறு விழாவில் பங்கேற்பவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படும்.  இத்தகைய பெரும் வரலாற்று சிறப்புமிக்க கான்ஸ் திரைப்பட விழாவில், இதுவரை இந்தியா பெரிதாக எதுவும் சோபிக்கவில்லை. சலாம் பாம்பே, தி லஞ்ச் பாக்ஸ், பூட் பாலிஷ், மரண சிம்ஹாசனம் உள்ளிட்ட 9 திரைப்படங்கள் மட்டுமே வெவ்வேறு பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளன.
  Published by:Shalini C
  First published:

  அடுத்த செய்தி