இயக்குனர் வசந்த் இயக்கத்தில் வெளியான ‘’சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’’ திரைப்படத்திற்கு ஜப்பானின் Fukuoka நகர அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுவதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதை தமிழக முதல்வரிடம் கொடுத்து இயக்குநர் வசந்த் வாழ்த்துபெற்றுள்ளார்.
தமிழில் வெளியான கேளடி கண்மணி, ஆசை உள்ளிட்ட படங்களின் மூலமாக கவனம் ஈர்த்த இயக்குநர் வசந்த், தற்போது சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற திரைப்படத்தை இயக்கினார்.
அதில் தமிழகத்தின் பெண்களின் நிலையை விளக்கும் வகையில் கதை எழுதி படமாக்கியிருந்தார். அந்த திரைப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வென்றது.
இதையும் படிங்க - Vikram Box Office: கமல் படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூலை குவித்த ‘விக்ரம்’… எத்தனை கோடி தெரியுமா?
இந்தப் படத்தை ஜப்பானின் புகுவோகா Fukuoka நகர அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுவதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் Asian Master Piece என்றும் பாராட்டியுள்ளனர்.
இதையும் படிங்க - விஜய் பிறந்த நாளையொட்டி வெளியாகுமா தளபதி 66 டைட்டில்? லேட்டஸ்ட் அப்டேட்…
இதற்கான சான்றிதழை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்து வாழ்த்துபெற்றுள்ளார் இயக்குனர் வசந்த்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.