முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தும் விவகாரம்... நீதிமன்றம் இடைக்கால தடை

இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தும் விவகாரம்... நீதிமன்றம் இடைக்கால தடை

இசைஞானி இளையராஜா

இசைஞானி இளையராஜா

தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து இளையராஜா தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி மற்றும் டி.வி.தமிழ்ச்செல்வி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இளையராஜாவின் பாடல்களை நான்கு இசை நிறுவனங்கள் பயன்படுத்த உரிமை உள்ளது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை பெறாமல் தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ, அகி மியூசிக், யுனிசிஸ், கிரி டிரேடிங் ஆகிய இசை நிறுவனங்கள் மீது இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அனிதா சுமந்த், இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த எக்கோ நிறுவனம் உள்ளிட்ட இசை நிறுவனத்துக்கு உரிமை உள்ளது என்று கடந்த 2019-ஆம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தார்.

தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து இளையராஜா தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி மற்றும் டி.வி.தமிழ்ச்செல்வி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சரவணன், ஒப்பந்தம் காலாவதியான பிறகும் பாடல்களை பயன்படுத்தி வருவதாகவும், இதற்கு உரிய காப்புரிமை பெறவில்லை என்றும் வாதிட்டார்.

ஆமாம் நான் காதலிக்கிறேன்... மனம் திறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

"பதிப்புரிமை" என்பதன் பொருளை பரிசீலிக்க தனி நீதிபதி தவறிவிட்டார் என்றும், இசைப் பணியைப் பொறுத்தவரை, பதிப்புரிமை என்பது "எந்த வடிவிலான ஊடகத்திலும், மின்னணு வழிகளிலும் சேமித்து வைப்பது உட்பட எந்த வடிவத்திலும் படைப்பை மீண்டும் உருவாக்குவதற்கு பெறும் பிரத்தியேக உரிமையாகும்" என்றும் வாதிடப்பட்டது.

வலிமை முதல் காட்சி ரத்து - அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதித்தும், வழக்கு குறித்து எக்கோ, அகி மியூசிக், யுனிசிஸ், கிரி டிரேடிங் ஆகிய இசை நிறுவனங்களும் பதிலளிக்க உத்தரவிட்டும் வழக்கு விசாரணையை மார்ச் 21-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Ilayaraja, Ilayaraja songs, Tamil Cinema