Cobra: விக்ரமின் கோப்ரா குறித்த சுவாரஸ்ய அப்டேட்!

கோப்ரா

இந்தப் படத்தில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் துருக்கியைச் சேர்ந்த இன்டர்போல் அதிகாரியாக நடித்துள்ளார்.

  • Share this:
    விக்ரமின் கோப்ரா படம் குறித்த சுவாரஸியமான அப்டேட்டை இயக்குனர் அஜய் ஞானமுத்து வெளியிட்டுள்ளார்.

    விக்ரம் தற்போது கார்த்திக் சுப்புராஜின் சியான் 60, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அத்துடன், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்திலும் நடித்து வருகிறார். இதில் அவர் பல்வேறு கெட்டப்புகளில் வருவதால் ரசிகர்கள் கோப்ராவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Interesting update on Vikram Cobra, cobra release, cobra release date, cobra vikram, cobra vikram movie, cobra vikram cast, cobra vikram online, cobra vikram watch online, chiyaan vikram, சியான் விக்ரம், விக்ரம் திரைப்படம், கோப்ரா திரைப்படம், கோப்ரா திரைப்படம், கோப்ரா ஆன்லைன்
    கோப்ரா


    இந்தப் படத்தில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் துருக்கியைச் சேர்ந்த இன்டர்போல் அதிகாரியாக நடித்துள்ளார். அவரது முல் திரைப்படம் இது. ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிக்குமார், மியா ஜார்ஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் படத்துக்கு இசையமைக்கிறார்.

    சென்னையில் நடந்து வந்த கோப்ராவின் படப்பிடிப்பு நேற்றிலிருந்து கொல்கத்தாவுக்கு ஷிப்ட் ஆகியுள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பை கொல்கத்தாவில் அஜய் ஞானமுத்து நடத்தி வருகிறார். சியான் 60 படத்தை தயாரிக்கும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. ஸ்பை த்ரில்லராக கோப்ராக உருவாகி வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: