Yuvan Shankar Raja: முதல் படத்தில் குட்டி பையனாக யுவன் - லைக்ஸை குவிக்கும் படம்!

யுவன் ஷங்கர் ராஜா

ஒரே நாளில் 100% குரல் பதிவு செய்யப்பட்டது. 14 வயதில் லிட்டில் மாஸ்டர் யுவன் இதை செய்தார்

  • Share this:
    இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது முதல் படத்தின் போது எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

    அம்மா கிரியேஷன்ஸின் தயாரிப்பாளர் சிவா தனது சமீபத்திய பதிவில், யுவன் சங்கர் ராஜாவின் முதல் பாடல் குறித்த சுவாரஸ்யமான செய்தியை குறிப்பிட்டுள்ளார். "பஞ்சு ஐயா மற்றும் இளையராஜா ஐயா ஆகியோரின் ஆசீர்வாதத்துடன் யுவன் ஷங்கர் ராஜாவை நான் அறிமுகப்படுத்திய பெருமைமிக்க நாளை நினைவில் கொள்கிறேன்” என அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.



    பின்னர் முதல் மற்றும் இரண்டாவது பாடல் லிங்குகளை பகிர்ந்த டி சிவா, "இரண்டு பாடல்களும் ஒரே நாளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பின்னர் எதுவும் சேர்க்கப்படவில்லை. ஒரே நாளில் 100% குரல் பதிவு செய்யப்பட்டது. 14 வயதில் லிட்டில் மாஸ்டர் யுவன் இதை செய்தார்" எனத் தெரிவித்திருந்தார்.

    பஞ்சு அருணாச்சலம், சரத்குமார், நக்மா, அம்மா கிரியேஷன்ஸ் சிவா ஆகியோருடன் குட்டி பையனாக யுவன் இருக்கும் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: