முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சாக்லெட் பாய் Vs ரக்கட் பாய் - விஜய்யின் லியோ புரமோவில் இதையெல்லாம் கவனிச்சீங்களா ?

சாக்லெட் பாய் Vs ரக்கட் பாய் - விஜய்யின் லியோ புரமோவில் இதையெல்லாம் கவனிச்சீங்களா ?

லியோ பட புரமோவில் விஜய்

லியோ பட புரமோவில் விஜய்

Thalapthy 67 Promo : போதை சாக்லெட்டுகள் குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகும் நிலையில் படத்தில் அது சார்ந்த கதையாக இருக்குமோ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தளபதி விஜய் - இயக்குநர் லோகேஷின் லியோ பட டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் உலா வரத்துவங்கின. இந்தப் படத்தின் தலைப்பு கே என்ற ஆங்கில எழுத்தில் துவங்குவதாக கூறப்பட்டது.

மற்றொரு பக்கம் கருடன் என்ற போஸ்டர்  லீக்கானதாக சமூக வலைதளங்களில் பரவியது. முன்னதாக மாஸ்டர் படத்தின் தலைப்பையும் பலரும் வாத்தி என்று கணித்தனர். ஆனால் அவர்களின் கணிப்பை லோகேஷ் பொய்யாக்கினார்.

இந்த நிலையில் தற்போது படத்தின் மிரட்டலான புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. வீடியோவில் படத்துக்கு லியோ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல இந்த முறையும் அனைவரது கணிப்பையும் இயக்குநர் லோகேஷ் பொய்யாக்கியிருக்கிறார்.

' isDesktop="true" id="884796" youtubeid="qN3wfuPYTI4" category="cinema">

புரமோவில் காஷ்மீரில் படு கூலாக சாக்லேட் தயாரித்துக் கொண்டிருக்கிறார் விஜய். மற்றொரு பக்கம் இரும்பு பட்டறையில் வாள் ஒன்றை செதுக்கிக் கொண்டிருக்கிறார் விஜய். பின்னணியில் சிலுவை படம் இருக்கிறது. ஒருவேளை படத்தில் இரண்டு விஜய்யா என்ற கேள்வியும் எழுகிறது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் சாக்லெட் பாய் VS ரக்கட் பாய் என ரசிகர்கள் டிரெண்ட் செய்துவருகிறார்கள்

இந்த நிலையில் முக மூடி அணிந்த கும்பல் ஒன்று அவரைத் தேடி வருவதுபோல காட்டப்படுகிறது. பின்னர் அந்த கும்பல் நெருங்கி வந்ததும் சாக்லெட்டில் முக்கி அந்த வாளை எடுத்து பிளடி ஸ்வீட் என்கிறார்.

கைதி, விக்ரம் படங்களில் தமிழ்நாடு அளவிலான போதைப் பொருள் கடத்தலை பதிவு செய்திருந்தார். இதில் காஷ்மீர் கதைக் களமாக இருப்பதால் இந்தியா அல்லது சர்வதேச அளவிலான போதைப் பொருள் கடத்தலை பற்றிய படமாக இருக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் போதை சாக்லெட்டுகள் குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகும் நிலையில் படத்தில் அது சார்ந்த கதையாக இருக்குமோ என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது.

விக்ரம் படம் துவங்குவதற்கு முன் இதுபோன்று டீசர் வெளியிடப்பட்டது. ஆனால் படத்துக்கும் அந்த டீசருக்கும் துளியும் சம்மந்தம் இருக்காது. அதுபோல இந்தப் படத்துக்கும் சம்மந்தம் இருக்குமா ? இல்லை படத்தின் தலைப்பை அறிவிக்க உருவாக்கப்பட்ட டீசரா என்பது பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Lokesh Kanagaraj