பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான பாடல் வெளியீட்டு விழாவை மார்ச் மாதம் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டோர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி வரவேற்பு பெற்றது. இந்தப் படம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியிட உள்ளனர்.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் இடம் பெற்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. அதேபோல இரண்டாவது பாகத்திலும் சில பாடல்கள் இடம்பெறுகின்றன. அந்த பாடல்களை வரும் மார்ச் மாதம் பிரம்மாண்ட விழா நடத்தி வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர். அதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானிடம் தேதி கேட்டுள்ளனர். அவர் தேதி இறுதி செய்ததும் பாடல் வெளியீட்டு விழா இறுதி செய்யப்படும் என படக்குழுவினர் தரப்பில் கூறுகின்றனர்.
முதல் பாகத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் பேசியவை அந்தப் படத்திற்கு பெரும் பலமாக அமைந்தது. அந்த வகையில் இரண்டாம் பாகத்தின் பாடல் விழாவையும் பிரபல படுத்த வேண்டும் என்றும் திட்டமிட்டுள்ளனர்.
பொன்னியின் செல்வன் 2 படத்திற்கான பாடல் விழா மார்ச் மாதம் நடைபெறும் நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு படத்தில் இடம்பெறும் முதல் பாடலை வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். அந்தப் பாடல் பணிகள் நிறைவடைந்தால், அதற்கான அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mani ratnam, Ponniyin selvan