முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'உதவி செய்தே கடன்.. நகைகளை அடமானம் வைத்து மீண்டும் உதவி..' மயில்சாமியின் மறுமுகம்!

'உதவி செய்தே கடன்.. நகைகளை அடமானம் வைத்து மீண்டும் உதவி..' மயில்சாமியின் மறுமுகம்!

மயில்சாமி

மயில்சாமி

தன்னுடைய பகுதி மற்றும் தெரிந்தவர்களுக்கு மட்டும் அல்லாமல், அவர் செல்லும் இடங்களில் சாலையில் மக்கள் வசித்தால் அவர்களுக்கும் உணவுகள் வாங்கிக் கொடுத்து பசியாற்றியுள்ளார் என அவருக்கு நெருங்கிய நண்பர்களும் திரை பிரபலங்களும் கூறுகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் மயில்சாமி பல்வேறு இயற்கை பேரிடர் காலங்களில் மக்களுக்கு உறுதுணையாக உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்கியுள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான மயில்சாமி நேற்று அதிகாலை மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இன்று அவருடைய உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் அவருடைய சேவை மனப்பான்மை குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நடிகர் மயில்சாமி இயற்கை பேரிடர் காலங்களில் ஏழை மக்களுக்கு உறுதுணையாக பல்வேறு உதவிகளை செய்துள்ளார். அதில் சென்னை வெள்ளம் ஏற்பட்ட சமயத்தில் தன்னுடைய பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்தார்.

அதிலும் அவருடைய தெருவில் தண்ணீர் தேங்கிய நிலையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் அவருடைய இல்லத்திற்கு அருகில் தன்னுடைய சொந்த செலவில் உணவுகளை சமைத்து அவரே ஒவ்வொருவரும் இல்லங்களிலும் சென்று வழங்கி வந்தார். அதன் பிறகு புயல் காலகட்டங்களிலும் ஏழை மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்து இருக்கிறார்.

அத்துடன் கொரோனா ஊரடங்கு சமயத்தில் வருமானமின்றி தவித்த ஏராளமான ஏழை குடும்பங்களுக்கு சமையலுக்கு தேவையான பொருட்களை தன்னுடைய சொந்த செலவில் வழங்கினார். அதற்காக பலரிடம் கடன் வாங்கியும் உதவியுள்ளார்.

ஒரு கட்டத்தில் கடன் அதிகமானதன் காரணமாக தன்னுடைய வீட்டில் இருந்த நகைகளை அடமானம் வைத்து ஏழைகளுக்கு உதவி செய்தார். அப்படி கொரோனா காலத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகளை சமீபத்தில்தான் மயில்சாமி மீட்டார்.

இது தவிர பல்வேறு நடிகர்களிடமிருந்தும் நிதி பெற்று பொதுமக்களுக்கு உதவிகள் வழங்கியுள்ளார்.  தன்னுடைய பகுதி மற்றும் தெரிந்தவர்களுக்கு மட்டும் அல்லாமல், அவர் செல்லும் இடங்களில் சாலையில் மக்கள் வசித்தால் அவர்களுக்கும் உணவுகள் வாங்கிக் கொடுத்து பசியாற்றியுள்ளார் என அவருக்கு நெருங்கிய நண்பர்களும் திரை பிரபலங்களும் கூறுகின்றனர்.

First published:

Tags: Mayilsamy